காவல் துணை ஆணையர் கணவர்... ராணுவ அதிகாரி மாமனார்... மலர் முகம் எப்படி பூக்கும்?

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியலில் மலருக்கு கல்யாணம் பேசி முடிச்சு இருக்கும் கதிர் காவல் துறை துணை ஆணையர்.

கதிரின் அப்பா,அதாவது மலரின் வரும்கால மாமனாரோ ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இதில் மலரிடம் ஏதோ கிரைம் வேற இருக்கு.

எப்போதும் ஒருவித பீதியில் இருக்கும் மலர், இவர்கள் இரண்டு பேரையும் எப்படி சமாளிக்க போகிறாள், அந்த குடும்பத்தில் எப்படி மருமகளாக வாழப் போகிறாள் என்பது பற்றித்தான் கதை நகருது.

சுவாதி மலர்

சுவாதி மலர்

மலருக்கும் அவளது தங்கை சுவாதிக்கும்தான்,மலர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரியும். முதலில் போலீஸ் மாப்பிள்ளை எண்றதும் இ ருவரும் பயத்தில் இருந்தாலும் ,கதிரின் நடவடிக்கைகள் முதலில் சுவாதியின் பயத்தை போக்குகிறது.

மலரிடம் சுவாதி

மலரிடம் சுவாதி

சுவாதி அக்கா மலரிடம் பயப்படாதே அக்கா..கதிர் மாமா உனக்கு ஏத்த ஜோடி.நீ வேணும்னு எந்த தப்பும் பண்ணலை...தற்காப்புக்காக கொலை செய்யலாம்னு சட்டத்துலேயே இருக்கு. தெரியும்போது பார்த்துக்கலாம்... கவலைப் படாதேன்னு அக்காவைத் தேத்தறா.

முக வாட்டத்தில் எப்போதும் மலர்

முக வாட்டத்தில் எப்போதும் மலர்

கல்யாணம் நிச்சயம் செய்தும் எப்போதும் ஒருவித பயத்தில் இருக்கும் மலர் கதிரிடம் மனம்விட்டு பேசுவதில்லை. அவன் அவளை சகஜ நிலைக்கு கொண்டு வந்து தன்னுடன் மகிழ்ச்சியாக வாழ வைக்க எவ்வளவோ முயற்சி செய்கிறான்.

தாய் மாமா மகனிடம் மலர்

தாய் மாமா மகனிடம் மலர்

மலரை தாய் மாமா மகன் ரவுடி அவளின் அப்பாவுக்கு ஆக்சிடென்ட் செய்ய வைத்து, மிரட்டி கோயிலுக்கு வர சொல்லி தாலி கட்ட தயாராகும்போது கதிர் வந்து காப்பாத்தி அழைச்சுக்கிட்டு போறான்.

மலர் கதிர் வீட்டில்

மலர் கதிர் வீட்டில்

மலருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மலரையும், சுவாதியையும் கதிர் வீட்டில் சில நாட்கள் தங்க வைக்கிறார்கள். அப்போது கதிரின் அறையில் மலரும் சுவாதியும் படுத்துக்கட்டும் என்று சொல்றாங்க மாமியார்.

எங்கு பார்த்தாலும் சூப்பர்

எங்கு பார்த்தாலும் சூப்பர்

படுக்கை அறையை மலரின் ஆசைப்படி பெயிண்ட், பல்ப் ,ஸ்கிரீன் என்று எல்லா விதத்திலும் உருவாக்கி வச்சு இருக்கான் கதிர். எத்தனையோ முறை கதிர் ஐ லவ் யூன்னு சொல்ல சொல்லி மலரிடம் கெஞ்சியும் அவள் இன்னும் சொல்லலை.

ஐ லவ் யூ சொல்ல ஆசை

ஐ லவ் யூ சொல்ல ஆசை

கதிர் தன்னை மாமனின் மகனிடம் இருந்து காப்பாத்தியது..படுக்கை அறையை தனது ரசனைக்கு ஏத்த மாதிரி தயார் செய்து வைத்திருப்பது எல்லாவற்றையும் பார்த்த மலருக்கு கதிரிடம் இப்போது ஐ லவ் யூ சொல்ல ஆசை வந்துருது.

கதிரின் போட்டோவை மார்போடு

கதிரின் போட்டோவை மார்போடு

கதிரின் போட்டோவை எடுத்து மார்போடு அணைச்சுக்கறா மலர். சுவாதி கதிரிடம் சென்று மாமா அக்கா உங்க கூட முக்கியமா ஒரு விஷயம் சொல்லணுமாம்...நிச்சயம் உங்க டார்கெட்டை நீங்க அச்சீவ் பண்ணிருவீங்க மாமான்னு சொல்றா.

ஆசை ஆசையாய் கதிர்

ஆசை ஆசையாய் கதிர்

ஆசை ஆசையாய் கதிர் மலரை வெளியில அழைச்சுக்கிட்டு போகும்போது, வழியில் ஒரு கேஸ் தற்கொலை பண்ணிக்கிச்சுன்னு போன் வருது கதிருக்கு. மலருடன் கதிர்.அங்கு செல்ல கணவனை கொலை செய்த பெண், போலீசில் மாட்டிக்குவோம்னு தற்கொலை செய்துக்கறா. இந்த கேஸை பார்த்த மலருக்கு முகம் வாடிப்போகுது.பயம் வந்துருது.

ஐ லவ் யூ நோ

ஐ லவ் யூ நோ

கதிரிடம் ஐ லவ் யூ சொல்ல மறந்து படபடப்பில் இருக்கா.மாமனார் கதிரிடம்...மலரை எதுக்கு அங்கே அழைச்சுக்கிட்டு போனே...குடும்பம் வேற..வேலை வேறன்னு முதலில் பழகிக்கோ...அந்த கேஸை நல்லா விசாரி தப்பு செய்தவங்க கட்டின பொண்டாட்டியா இருந்தாலும், பெத்த அப்பனா இருந்தாலும் விடக்கூடாதுன்னு வேற சொல்றார்.

மலர் முகத்தில் சூரியனின் அத்தனை கதிர் வீச்சுக்களும் ஒன்றாகப் பாய்ந்தது போல அதிர்ச்சி... இந்த மலர் இந்த வீட்டில் மலர்ந்து இருக்குமா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X