வாய் இருக்க மாட்டாம வம்புல மாட்டிவிட்டுட்டாங்களே மலரோட அம்மா....!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் குடும்பத்தின் மலர் கொலையும் செய்துட்டு, போலீஸ் கமிஷனரை கல்யாணம் செய்துக்கிட்டா எப்படி?
அடுத்த ஒரு நொடி கூட நான் சந்தோஷமா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறியா கடவுளேன்னு மனசுக்குள்ள அழறா.
பாவம்... அவளால் வாய்விட்டு கூட அழ முடியாத நிலை.. பாவம் அவ சும்மா இருந்தாலும்..அம்மா சும்மா இல்லாமல் செய்த வேலைதான் இது.

ஸ்பீச் தெரபி மலர்
மலர் ஸ்பீச் தெரபி கொடுத்து வரும் குழந்தையின் சித்தப்பா கவுசிக்கை மூணு வருஷமா காணோம். மலர் போலீஸ் அசிஸ்டென்ட் கமிஷனரை கல்யாணம் செய்துக்கறதால ,அவர்கிட்ட சொன்னா கண்டு பிடிச்சுடுவார்னு மலரின் அம்மா மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிடறாங்க.

தவறாத போலீஸ்
கடமை நேர்மை தவறாத போலீஸ் மலருக்கு பார்த்து இருக்கும் மாப்பிள்ளை கதிர். உடனடியா அவனைத் தேடும் முயற்சியில் அவங்க வீட்டுக்கு போறான் கதிர் மலரையும், அவள் தங்கை சுவாதியையும் அழைச்சுகிட்டு. போறான்.அங்கு அவனின் அப்பா காணாமல் போன மகன் பேரு கவுசிக் என்றும், அவன் உயிரோட இருக்க வாய்ப்பில்லை... மண்ணோடு மண்ணாகி இருப்பான்னு வேதனையோட சொல்றார்.

கொலைகாரி மலர்
மலர் மூணு வருஷத்துக்கு முன்னால தற்காப்புக்கு ஒரு கொலை செய்துடறா... இந்த விஷயம் மலருக்கும் ,அவளது தங்கை சுவாதிக்கும் மட்டும்தான் தெரியும். இப்போது இந்த கேஸை கையில் எடுத்து இருக்கான் கதிர்.

போலீஸ்காரனா என்
நான் தெரிஞ்சவனா இந்த கேஸை எடுக்கலேன்னாலும், ஒரு போலீஸ்காரனா இந்த கேஸை எடுத்து,சும்மா இப்படின்னு சொல்றதுக்குள்ள கேஸ் என்னன்னு கண்டு பிடிச்சுருவேன்னு சொல்றான் .மலருக்கு திக் திக்னு இருக்கு.
கொலைகாரி...இன்னும் சில நாட்களில் போலீஸ்கரன் மனைவியாகப் போறா... இல்லை அதுக்குள்ள மாட்டிக்குவாளா.. என்ன நடக்குது பார்க்கலாம்...


Click it and Unblock the Notifications











