மலையாளம் பிக் பாஸை தொகுத்து வழங்க மோகன்லாலுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

By Siva

Recommended Video

பிக் பாஸை தொகுத்து வழங்க மோகன்லாலுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?- வீடியோ

திருவனந்தபுரம்: மலையாளம் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மோகன்லாலுக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்துள்ளார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியில் வெற்றி பெற்றதை அடுத்து கடந்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் அறிமுகம் செய்து வைத்தார்கள். இந்த இரண்டு மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து இந்த ஆண்டு மலையாளத்திலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

மலையாளம்

மலையாளம்

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியை சூப்பர் ஸ்டார் மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கவர்ச்சிப் புயல் ஸ்வேதா மேனன் கலந்து கொண்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மோகன்லால்

மோகன்லால்

வார இறுதி நாட்களில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து செல்ல மோகன்லாலுக்கு ரூ. 12 கோடி சம்பளமாம். மலையாளம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த சுமார் ரூ. 44 கோடி வரை செலவு செய்துள்ளார்களாம்.

மும்பை

மும்பை

பிக் பாஸ் வீடு செட்டை முதலில் கொச்சியில் தான் போட்டனர். ஆனால் கனமழை பெய்து செட் விழுந்துவிட்டதால் மும்பையில் உள்ள பிலிம் சிட்டியில் செட் போட்டு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.

சர்ச்சை

சர்ச்சை

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான ரஞ்சினி ஹரிதாஸ் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கையோடு நடிகர் சாபு மோனுடன் மோதினார். நீங்கள் எப்படி சமூக வலைதளத்தில் என்னை விமர்சிக்கலாம். உடனே மன்னிப்பு கேளுங்கள் என்றார்.

புகார்

புகார்

நடிகரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சாபுமோன் தன்னை பற்றி அசிங்கமாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டதாக பாஜக பெண் உறுப்பினர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் சாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சாபு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X