வயதான இயக்குநரை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை.. கேரளாவில் நடந்த ரகசிய திருமணம்!

சென்னை: சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதர் மற்றும் கிரிஷ் வேணுகோபாலை குருவாயூர் கோவிலில் நெருக்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

மலையாள நடிகையான திவ்யா ஸ்ரீதர் தனது 18வது வயதில் கண்டெக்டர் என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து நடித்து வந்த இவர் முதல் திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இவருக்கு தேவானந்த் என்ற மகனும், மாயா என்ற மகளும் இருக்கும் நிலையில், 2019ம் ஆண்டு முதல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். அதன் பிறுகு மீண்டும் சின்னத்திரையில் பிஸியான நடிகையாக மாறிய இவர், Varan doctor Aanu, patharamattu, Manathe kottaram ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

divya sridhar marriage

ரகசிய திருமணம்:நடிகை திவ்யா ஸ்ரீதர் தன்னுடன் 'பத்தரமாட்டு' தொடரில் இணைந்து நடித்த கிரிஷ் வேணுகோபாலை புதன்கிழமை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குருவாயூர் கோவிலில் ரகசியமாக நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.பத்தரமாட்டு என்ற சீரியலில் நடித்த போது இருவரும் காதலிக்கத் தொடங்கியதை அடுத்து தற்போது, எந்த மீடியாவிற்கும் தெரியாமல் திருமணத்தை முடித்துவிட்டு, இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இரண்டாம் திருமணம்: நடிகர் கிரிஷ் வேணுகோபால் நடிகராக மட்டுமில்லாமல் ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும், இயக்குநர், எழுத்தாளும் ஆவர். கோச்சியில் பிறந்த வேணுகோபாலுக்கு தற்போது 50 வயதாகிறது. இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்த இவர் தற்போது திவ்யா ஸ்ரீதரை திருமணம் செய்து கொண்டார். தன்னைவிட பத்து வயது குறைவான, விவாகரத்து பெற்ற நடிகையை இவர் திருமணம் செய்து கொண்டது சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

divya sridhar marriage

குழந்தைகளிடம் சம்மதம்: திருமணம் குறித்து பேசிய திவ்யா ஸ்ரீதர், நான் முதன் முதலில் வேணுகோபாலை பார்த்த போது, கொஞ்சம் பயந்தேன். கடைசியிர்ல அவர் காதலை சொன்ன போது,அவர கேலி செய்கிறார் என்று நினைத்தேன். அதன்பின் தான்,அவர் கேலி செய்யவில்லை என்று எனக்குப் புரிந்தது. என் குழந்தைகள் உணர வேண்டியது அவசியம் என்பதால், என் குழந்தைகளிடம் கலந்து ஆலோசித்தேன். இது ஒரு உண்மையான பிணைப்பாக இருக்கும் என்று தெரிந்த பிறகுதான் திருமணத்திற்கு சம்பதித்தேன். ஆனால் திருமணத்திற்குப் பிறகு இதுபோன்ற எதிர்மறையான கருத்துகள் வரும் என்று தெரியும். வேறொருவரின் வாழ்க்கையில் என்ன பிரச்சனைகள் இருக்கு, அவர் எந்தமாதிரியாக பிரச்சனைகளை எல்லாம் கசித்துக்கொண்டு வாழ்ந்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது.

யாருக்கு என்ன பிரச்சனை: இதையடுத்து பேசிய கிரிஷ் வேணுகோபால், இருவரும் மனமும், இருவரின் குடும்பமும் ஒத்துத்தான் இந்த திருமணத்தை செய்து கொண்டோம். அப்படி இருக்கும் போது வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்ன பிரச்சனை. நடிகர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பது தான் பலரின் வேலையாக உள்ளது. எங்கள் திருமணம் குறித்து எந்த எதிர்மறையாக வந்தால் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கிரிஷ் வேணுகோபால் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X