காமம் மட்டும் தான் வாழ்க்கையா? 2ம் திருமணம் செய்த சீரியல் நடிகை பளீச் பதில்!
சென்னை: மலையாள சீரியல் திவ்யா ஸ்ரீதர், 50 வயதான இயக்குநரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவியது மட்டுமில்லாமல், கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான நிலையில், இணையவாசிகளுக்கு திவ்யா ஸ்ரீதர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
மலையாள நடிகையான திவ்யா ஸ்ரீதர் சீரியலில் நடித்துக்கொண்டு இருந்த போது திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இவருக்கு தேவானந்த் என்ற மகனும், மாயா என்ற மகளும் இருக்கும் நிலையில், 2019ம் ஆண்டு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். அதன் பிறகு மீண்டும் நடிக்க வந்த இவர், Varan doctor Aanu, patharamattu, Manathe kottaram என பிரபலமான சீரியலில் நடித்துள்ளார்.

இரண்டாவது திருமணம்: நடிகை திவ்யா ஸ்ரீதர் 'பத்தரமாட்டு' தொடரில் நடித்துக்கொண்டு இருந்த போது, தன்னுடன் நடித்த கிரிஷ் வேணுகோபாலை புதன்கிழமை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குருவாயூர் கோவிலில் ரகசியமாக நடந்துள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். எந்த மீடியாவிற்கும் தெரியாமல் இவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்வது குற்றமா: இவர்களின் திருமண போட்டோ இணையத்தில் டிரெண்டானதை தொடர்ந்து இது என்ன அறுபதாவது திருமணமா என்று கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுத்துள்ள நடிகை திவ்யா ஸ்ரீதர், இணையத்தில் பரவி வரும் இந்த விமர்சனத்தை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. ஏன் இப்படி வன்மதை பரப்புகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. திருமணம் செய்வது தவறான விஷயமா? இது போன்ற எதிர்மறையான கருத்துகள் வருத்தம் அளிக்கிறது. உடலுறவுக்காக நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை.
வாயை அடைக்க முடியாது: 60 வயதுடையவரை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. கிரிஸ் வேணுகோபால்1975ம் ஆண்டு பிறந்தார் அவருக்கு 49 வயது, நான் 1984ம் ஆண்டு பிறந்தேன் எனக்கு 40 வயதுதான் ஆகிறது. வயதை காரணமாக காட்டி பேசுபவர்கள் பேசட்டும். ஆயிரம் குடங்களில் வாயை மூடிவிடலாம். ஆனால் ஒரு மனிதரின் வாயை அடைக்க முடியாது என்று, இணையத்தில் கேலி, கிண்டல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
இரண்டாம் திருமணம்: நடிகர் கிரிஷ் வேணுகோபால் நடிகராக மட்டுமில்லாமல் ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும், இயக்குநர், எழுத்தாளும் ஆவார். கொச்சியில் பிறந்த வேணுகோபாலுக்கு தற்போது 49 வயதாகிறது. இதுவரை திருமணமே செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்த இவர் தற்போது திவ்யா ஸ்ரீதரை திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து பேசிய கிரிஸ், நடிகர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பது தான் பலரின் வேலையாக உள்ளது. எங்கள் திருமணம் குறித்து எந்த எதிர்மறையான கருத்து வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











