போட்டியாளர்கள் 'அவர்' போவார் என நினைக்க மமதியை வெளியே அனுப்பிய பிக் பாஸ்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டுள்ளார் மமதி சாரி.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் முதல் வாரம் யாரையும் வெளியேற்றவில்லை. இந்நிலையில் ஆனந்த் வைத்தியநாதன், மும்தாஜ், மமதி சாரி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.
இதில் மமதி சாரி பிக் வாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

மமதி
பிக் பாஸ் வீட்டில் யார் இல்லாவிட்டால் நன்றாக இருக்கும் என்று போட்டியாளர்களிடம் கேட்டபோதே மமதியின் பெயரை கூறினார்கள். மமதி போலியாக நடிப்பதாக போட்டியாளர்கள் கமலிடம் புகார் தெரிவித்தனர்.

நல்லவர்
அது எப்படி ஒருவரால் எந்த நேரத்திலும் சிரித்த முகமாக, நல்லவராக இருக்க முடியும் என்று போட்டியாளர்கள் கமலிடம் கேட்டனர். மமதி போலியான சிரிப்புடன் நல்லவர் போன்று நடிக்கிறார் என்றனர்.

மும்தாஜ்
பிக் பாஸ் வீட்டில் நாட்டாமை பண்ணும் மும்தாஜுக்கு மமதிஆதரவாக இருந்து வந்தார். இதை கமலே நிகழ்ச்சியில் தெரிவித்தார். மமதி வெளியேறியுள்ளதால் மும்தாஜ் தனி ஆளாகிவிட்டார்.

எதிர்ப்பு
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அடுத்ததாக மும்தாஜை வெளியேற்ற விரும்புகிறார்கள். மமதி வெளியே கிளம்பிய போது மும்தாஜ் அழுதுவிட்டார். மைக்கை கழற்றி போராட்டம் நடத்தியதால் மும்தாஜ் தான் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மமதி வெளியேற்றப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











