புதுயுகம் டிவியில் பிரபலங்களின் மனம் திரும்புதே

By Mayura Akilan

பிரபலங்கள் தங்கள் வாழ்க்கையில் கடந்துவந்த பாதையை திரும்பிப்பார்க்கும் சுவையான நிகழ்ச்சி மனம் திரும்புதே. இந்நிகழ்ச்சி ஞாயிறு தோறும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை புதுயுகம் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகிறது

இதில் விருந்தினராக வருபவர்கள் அரசியல், இலக்கியம், கலைத்துறை என பல துறையைச் சார்ந்தவர்களாகவும் இருப்பார்கள். நிகழ்ச்சியை வழிநடத்தும் தொகுப்பாளராக 'பிளேடு' தீனா இருக்கிறார்.

அரங்கத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பாடகருடன், வாத்தியக்கலைஞர்களும் இருப்பார்கள். பிரபலமான பாடல் ஒன்றினை ரீமிக்ஸ் செய்து, விருந்தினரைப் பற்றி எழுதப்பட்ட பாடலைப்பாடுவார்கள்.

விருந்தினருக்கு சஸ்பென்ஸ்

விருந்தினருக்கு சஸ்பென்ஸ்

ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியில் ஒவ்வொரு பகுதிகளிலும் விருந்தினரின் நண்பர் ஒருவர் சஸ்பென்ஸ் எண்ட்ரி கொடுத்து, அசத்துவார்.

பிரபலத்தின் மற்றொரு முகம்

பிரபலத்தின் மற்றொரு முகம்

விருந்தினரின் பழைய புகைப்படங்கள் காட்டப்பட்டு அப்படம் எடுக்கப்பட்ட சூழ்நிலையில் கதையும் பேசுவார்கள். ஒருதுறையின் வாயிலாக நாம் அறிந்திருக்கும் பிரபலத்தின் இன்னொரு முகம் பற்றி இந்த நிகழ்ச்சியில் அறிந்து கொள்ளலாம்.

இயக்குநர், நடிகர் ராஜசேகர்

இயக்குநர், நடிகர் ராஜசேகர்

இயக்குநர், பிரபல தொலைக்காட்சி நடிகர் ராஜசேகர், நடிகர் ராம்கி மற்றும் அவரது நண்பர்கள் பங்குபெறும் சிறப்பு நிகழ்ச்சி இந்த வாரம் ஞாயிறு இரவு ஒளிபரப்பாகிறது.

தமிழச்சி தங்கப்பாண்டியன்

தமிழச்சி தங்கப்பாண்டியன்

மனம் திருப்புதே நிகழ்ச்சியில் இதுவரை பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். ட்ரம்ஸ் சிவமணி, ஞானதேசிகன் (காங்கிரஸ்), நடிகர் ஆதி,. இயக்குனர் கவிஞர் கவிதாபாரதி, இயக்குனர் வி.சேகர், நடிகர் விஜய் வசந்த், பங்கேற்றுள்ளனர்.

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

மேலும் நடிகர் அருள்நிதி, நடிகர் சரவணன், பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழச்சி தங்கப்பாண்டியன், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், செஃப் தாமு, சமுத்திரக்கனி+ ஜெயம் ரவி+ சூரி, டாக்டர். அன்புமணி ராம்தாஸ் (பா.ம.க), நடிகர் வின்சன்ட் ராய் ஆகியோரும் பங்கேற்று தங்களின் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X