twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்.ஜி.ஆர் நடித்த மந்திரி குமாரி படத்துக்கும் குண்டலகேசிக்கும் என்ன சம்பந்தம்?

    By Mayura Akilan
    |

    சென்னை: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த மந்திரி குமாரி திரைப்படம் குண்டலகேசி என்ற ஐம்பெரும் காப்பியத்தை தழுவி எடுக்கப்பட்டது என்று எத்தனை பேருக்கு தெரியும். நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளரிடம் எம்.ஜி.ஆர் நடித்த 'மந்திரி குமாரி எந்த இதிகாசத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்று கேட்டு மணிமேகலை, குண்டலகேசி என்று நான்கு பதில்களை முன் வைத்தார் அரவிந்த்சாமி. 25 லட்சம் ரூபாய்க்கான கேள்வி அது. அதுவரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறி 12.50 லட்சம் ரூபாயை வென்றிருந்த அந்த ஜோடி, மந்திரி குமாரி படத்திற்கான கேள்விக்கு பதில் தெரியாமல் போட்டியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியை பார்த்த பல எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சற்றும் யோசிக்காமல் குண்டலகேசி என்று பதில் கூறினர். போட்டியில் இருந்து வெளியேறிய ஜோடி, மணிமேகலை காப்பியத்தை தழுவி எடுக்கப்பட்டது மந்திரி குமாரி என்று தவறாக பதில் கூறினர். கடைசியில் அந்த தவறை திருத்தி குண்டலகேசி என்று சரியான பதிலை சொன்னார் அரவிந்த் சாமி.

    Mandhiri Kumari connection with Kundalakesi

    ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான 'குண்டலகேசி' யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து 'மந்திரிகுமாரி' என்ற நாடகத்தை கருணாநிதி உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க சுந்தரம் தீர்மானித்தார்.

    திரைக்கதையை அமைத்து வசனத்தை எழுதித் தரும்படி கருணாநிதியிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று வரலாற்று சிறப்பு மிக்க வசனம் எழுதத் தொடங்கினார் கருணாநிதி.

    மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக்கொண்டிருந்தார். ஏற்கனவே கருணாநிதி வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும் கருணாநிதிக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கருணாநிதி பலமாக சிபாரிசு செய்தார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.

    மந்திரி குமாரியின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் மந்திரியின் மகள் அமுதாவும் ஆருயிர் தோழிகள். தளபதியை (எம்.ஜி.ஆர்) ராஜகுமாரி காதலிக்கிறாள். மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன்.

    பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். 'கொள்ளையடிப்பது ஒரு கலை' என்பது அவன் கொள்கை.மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள்.

    கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி தளபதி மீது விழுகிறது.

    தன் கணவன் கொடியவன் கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.

    வாராய் நீ வாராய்... என்று பாட்டுப்பாடியபடியே, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, 'சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்" என்று வேண்டுகிறாள், அமுதா.

    அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.

    திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய 'வாராய், நீ வாராய்' என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது. இந்த படத்தைப் பற்றிய கேள்வியை கேட்ட அரவிந்த் சாமியும் இந்த பாடலை பாடியே க்ளு கொடுத்தார். ஆனாலும் போட்டியாளர்களால் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுவரை 12.50 லட்சம் ரூபாய்தான் செக் எழுத முடிந்தது. இன்றைக்காவது 25 லட்சம் ரூபாய்க்கு செக் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறார் அரவிந்த் சாமி, அவரது ஆசை இன்றைக்கு நிறைவேறுமா?

    நீங்களும் வெல்லலாம் நிகழ்ச்சியை படு சுவாரஸ்யமாகவே நடத்துகிறார் அரவிந்த் சாமி. இன்றைய போட்டியாளர் நாகப்பட்டிணம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியர். அனைவருக்கும் கொடுத்து பழக்கப்பட்ட மீனவர்கள் சுனாமிக்குப் பிறகுதான் பிறரிடம் இருந்து வாங்க ஆரம்பித்துள்ளோம் என்று உருக்கமாக கூறினார். இவர்கள் வெல்லப்போவது லட்சமா? கோடியா பார்க்கலாம்.

    English summary
    Manthiri Kumari is a 1950 Indian Tamil historical fiction film directed by Ellis R. Dungan and starring M. G. Ramachandran and M. N. Nambiar. The screen play was written by M. Karunanidhi based on an incident from the Tamil epic Kundalakesi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X