தாலியை வச்சு தாலியைக் காப்பாத்திட்டீங்களே டைரக்டர்.. நீங்க நல்லா இருப்பீங்க போங்க!

By Mayura Akilan

தாலி சென்டிமென்ட்டுக்கு எப்பவுமே நல்ல மவுசு, ஒரு கிரேஸு இருப்பது உண்மைதான். சினிமாவில்தான் இந்த சென்டிமென்ட் கொடி கட்டிப் பறந்தது.

எப்போதுமே அழுது வடியும் டிவி சீரியல்களிலும் கூட இப்போது இந்த தாலி சென்டிமென்ட்டை வைச்சு பலரையும் மென்டல்களாக்கி வருகிறார்கள் இயக்குநர்கள்.

இப்படித்தான் சமீபத்தில் ஒரு டிவி சீரியலில் தாலி சென்டிமன்ட்டை வைத்து ஒரு தாலியைக் காப்பாற்றியுள்ளனர்.

வம்சமா? வன்மமா?

வம்சம் என்பது அந்த சீரியலின் பெயர். இதைத் தவறாமல் பார்ப்பவர்கள் சத்தியமாக ரத்த வாந்தி எடுத்து செத்துப் போவார்கள் என்று கூறும் அளவுக்கு அகோரமான கதைக் கருவுடன் நாட்களை நகர்த்தி வருகிறது இந்த சீரியல்.

பாவம் பூமிகா

முதுகு அரித்தால் அதிகபட்சம் விசிறிக் கம்பை வைத்து சொறியலாம். ஆனால் இவர்களோ பிக்காஸை வைத்து சொறிவது போல பூமிகா என்ற கேரக்டரை வைத்து கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.

Mangal suthra sentiment on Vamsam TV Serial

கள்ளக்காதல் கதைதான்

இந்த பூமிகா மலைநாட்டுப் பெண்ணாம், ரொம்ப அப்பாவியாம், வெள்ளந்தியாம். - எப்படி என்றால் புருஷன் தனது கள்ளக்காதலியை திருமணம் செய்வதற்குக் கூட உடன் போவாளாம். அவர்களது நிச்சயதார்த்தத்திற்கும் கூடப் போவாளாம்.

தாலியை இறக்கு

இந்த கொடுமைக்கு மாமியார்க்காரம்மா வேறு உடந்தை. அவருக்கு பூமிகாவைக் கண்டாலே பிடிக்காதாம். எரிந்து விழுவார். ஆனால் தனது மருமகளின் தாலியை இறக்கி, மகனுக்கு அவன் விரும்பும் சுப்ரியா என்ற பெண்ணையே மணம் முடித்து வைக்க துடியாய்த் துடிக்கிறார்.

கள்ள நிச்சயதார்த்தம்

வீ்ட்டில் இப்படி ஒரு வில்லங்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடினாலும் கூட அந்த வீட்டுத் தலைவருக்கு அதாவது பூமிகாவின் மாமானருக்கு மட்டும் எதுவுமே தெரியாது. ஏன்னா யாருமே இந்த மேட்டரை அவரிடம் சொல்லவ இல்லையே. அதாவது அவருக்கே கூட தெரியாமல் திருமண நிச்சயதார்த்தம், பூமிகா விவாகரத்து என ஏகப்பட்ட மேட்டர்கள் ஓடிக் கொண்டிருக்கிறது அந்த வீட்டில்.

டைரக்டர் ட்விஸ்ட்

கள்ளக்காதலியுடன் மகன் திருமண நிச்சயதார்த்தத்திற்காக மருமகள் பூமிகாவையும் கூட்டிக் கொண்டு போகிறார் மாமியார்க்காரம்மா. போற வழியில் பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிடுகிறார்கள். அங்குதான் டைரக்டர் வைத்தார் டிவிஸ்ட்டை.

தாலி போச்சே!

சாமி கும்பிட்டு விட்டு எல்லோரும் வெளியே வரும்போது பூமிகாவின் மாமியார் தாலியை குறி வைத்து ஒரு திருட்டுப்பய திருடிக் கொண்டு ஓடுகிறான். மாமியார் அப்படியே ஷாக்காகி கதற, மகனோ போனா போகுதும்மா, வேற வாங்கிக்கலாம் (எங்கே சிட்டி சென்டர் மாலில் உள்ள கடைக்குப் போயா??), வாம்மா சுப்ரியா காத்திருப்பாம்மா என்று அவசரப்படுத்துகிறான்.

தாலியை காப்பாற்றிய மருமகள்

மருமகள் பூமிகாவோ, நீங்க இருங்க அத்தை நான் போய் மீட்டுட்டு வர்றேன் என்று துள்ளிக் குதித்து ஓடிப் போய் தாலியை திரும்பப் பறித்துக் கொண்டு வந்து அத்தையிடம் கொடுக்க.. அத்தை முகத்தில் மட்டுமல்ல, மனதிலும் சுனாமி அளவுக்கு பெரும் மாற்றம்.

யாரு தாலியை பறிக்க நினைச்சே

அதன் பிறகு சுப்ரியாவை மகனுக்கு நிச்சயதார்த்தம் செய்வது குறித்து அவர் யோசனையில் மூழ்குகிறார். உடனே வீட்டுக்கு வந்து கணவர் கையால் தாலியை கட்டிக்கொள்கிறார் மாமியார். அதற்கு மாமனார் கேட்பதுதான் செம அப்ளாஸ். நீ யாரு தாலியை பறிக்க நினைச்சியோ? உன் தாலி பறிபோயிருக்கு என்கிற ரீதியில் போகிறது வம்சம்.

இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே ஓட்டப் போகிறார்களோ... !

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X