Manimegalai: காலையிலேயே கண்ணை கசக்கிட்டு நிற்கும் மணிமேகலை.. பிறந்தநாள் அதுவுமா இப்படியா?
சென்னை: குக் வித் கோமாளி மூலம் பிரபலமான விஜே மணிமேகலை இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், காலையிலேயே கண்ணை கசக்கிக் கொண்டு அவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
கடந்த 2010ல் சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட்ஸ் நிகழ்ச்சி மூலமாக விஜேவாக அறிமுகமானவர் மணிமேகலை. சன் மியூசிக்கின் தொகுப்பாளினியாக இருந்த இவர், விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட நிலையில், அங்கேயும் தொகுப்பாளினியாக கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் மாறினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் மணிமேகலை விலகியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
31வது பிறந்தநாள்: பிரபல தொகுப்பாளினியான மணிமேகலை இன்று தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 1992ம் ஆண்டு மே 7ம் தேதி திருப்பூரில் பிறந்த மணிமேகலைக்கு இன்ஸ்டாகிராமில் தற்போது 3.5 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர்.
கலகலப்பான பேச்சால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வந்த மணிமேகலை, தனது பிறந்தநாள் அதுவுமாக கண்ணை கசக்கியபடி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

கண்ணை கசக்கிய மணிமேகலை: பிறந்தநாளை முன்னிட்டு எங்கேயோ ஊருக்கு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், காலையிலேயே அவரது கார் டயர் பஞ்சராகி விட்டது. அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்ட மணிமேகலை வீடியோவின் தொடக்கத்தில் தனது கண்ணை கசக்கியபடி இந்த வருஷம் எப்படி இருக்கப் போகுதுன்னு இப்பவே தெரிஞ்சிடுச்சு என புலம்பி உள்ளார்.
பர்த்டே பஞ்சர்: டயர் பஞ்சர் என் பர்த்டேவும் பஞ்சர் என புலம்பியபடியே ஸ்டெப்னியை எடுத்துக் கொண்டு செல்லும் மணிமேகலை, இந்த வருஷம் என் வாழ்க்கையும் இதே போல ஸ்டெப்னியில் தான் ஓடப் போகுதுன்னு நினைக்கிறே எனக் கூறியுள்ளார்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல பிறந்தநாள் அதுவுமா கார் டயர் பஞ்சர் ஆனதை அபசகுணமாக நினைத்துக் கொண்டு மணிமேகலை இப்படி புலம்பியதை பார்த்த ரசிகர்கள் அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுக்கா ஹேப்பியா இருப்பீங்க.. ஹேப்பி பொறந்தநாள் என வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications