விஜே பிரியங்காவுடன் மோதல்.. அதெல்லாம்.. குக் வித் கோமாளி சச்சரவு பற்றி மணிமேகலை ஷேரிங்ஸ்

சென்னை: சின்னத்திரையில் ஃபேமஸான தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. 15 வருடங்களுக்கும் மேலாக இந்தப் பணியை செய்துவரும் அவர் விஜய் டிவியில் ஏற்பட்ட ஒரு பிரச்னை காரணமாக இப்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆங்கரிங் செய்துவருகிறார். இந்நிலையில் பிரியங்காவுடன் இப்போதும் பேசிக்கொண்டிருக்கிறேனா என்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் பகிர்ந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் பிரபலமானவர் தொகுப்பாளினி மணிமேகலை. முதலில் சன் நெட்வொர்க்கில் வேலை செய்துகொண்டிருந்த அவர் அடுத்தடுத்து சேனல்கள் மாறினார். அப்படி அவர் விஜய் டிவியிலும் கலக்கினார். அந்த நேரத்தில்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய கலகல பேச்சு, டைமிங் காமெடிகள் என அந்நிகழ்ச்சியை சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக்கொண்டார்.

பிரியங்காவால் வந்த சிக்கல்: மணிமேகலை தொகுத்து வழங்கிய சீசனில் விஜய் டிவியில் இன்னொரு பிரபலமான தொகுப்பாளினியான விஜே பிரியங்கா போட்டியில் கலந்துகொண்டார். அவருக்கு அடிப்படையில் தொகுப்பாளினி என்பதால் அவருக்கும் மணிமேகலைக்கும் இடையே நிகழ்ச்சியில் கொஞ்சம் கொஞ்சம் உரசல் வந்தது. ஒருகட்டத்தில் இரண்டு பேருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் அந்த சேனலில் இருந்தும், நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறினார் மணிமேகலை.

Manimegalai has now spoken about the clash between VJ Priyanka in Cook With Comali
Photo Credit:

மணிமேகலையின் கருத்து: மேலும் அந்த நிகழ்ச்சியின் முந்தையை சீசனில் கோமாளியாகவும் கலந்துகொண்டவர். பிரியங்காவுடன் எழுந்த மோதல் தொடர்பாக பேசிய அவர், 'இப்போது நான் தொகுத்து வழங்குகையில் பிரியங்கா ஓவராக தலையிடுகிறார். எனக்கு சுயமரியாதை ரொம்பவே முக்கியம்' என்று சொல்லி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார். அதுமட்டுமின்றி என்ன நடந்தது என்பது தொடர்பாக மேலும் சில விஷயங்களை சொல்லி வீடியோ வெளியிட்டிருந்தார்.

சைலெண்ட் மோடில் பிரியங்கா: இந்தப் பிரச்னையின்போது பிரியங்காவும் பெரிதாக ரியாக்ட் செய்துகொள்ளவில்லை. அவர் இப்போது இரண்டாவது திருமணம் செய்து செட்டிலாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க அந்தப் பிரச்னை முடிந்ததா இன்னமும் அவர்களுக்குள் முட்டல் மோதல் நிலவிவருகிறதா என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார் மணிமேகலை.

மணிமேகலை பேட்டி: அவர் அந்தப் பேட்டியில், "ஜீ தமிழில் இதற்கு முன்பு நான் நிகழ்ச்சிகள் செய்தது கிடையாது. எனவே அங்கிருந்து அழைப்பு வந்தபோது கொஞ்சம் யோசித்தேன். ஆனால் ஒரு பெரிய சண்டை சச்சரவுக்கு பிறகு அந்த வாய்ப்பு வந்தது. அது நல்லதாகத்தான் இருக்கும் என என்னுடைய உள் மனது சொல்லியது. நான் எப்போதுமே என்னுடைய உள் மனது என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்பேன். டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது நல்ல அனுபவம்.

அதெல்லாம் முடிந்துபோன சேப்டர்: சில விருதுகளும் அந்த நிகழ்ச்சி வாங்கிக்கொடுத்தது. 16 வருடங்களாக இந்த வேலையை நான் செய்துவருகிறேன். ரொம்பவே பிடித்த வேலை. கடந்த ஆண்டு பிரியங்காவுடன் நடந்த சம்பவத்துக்கு பிறகு அவருடன் பேச வேண்டிய அவசியம் இல்லை. என்னை பொறுத்தவரை அது முடிந்துபோன மேட்டர்" என பேசியிருக்கிறார் அதிரடியாக.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X