For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அட கூறு கெட்ட குக்கரே.. சோறு ஆக்க கிளம்புனது குத்தமாய்யா.. மணிமேகலை பரிதாபங்கள்!

  |
  Manimegalai Parithabangal | Hussain கதறல் | Cook with Comali

  சென்னை: குக்கு அக்கா இன்னிக்கு சமைக்க வர முடியாதுன்னு சொல்லி நீங்க இன்னிக்கு மட்டும் சமாளிங்கன்னு சொல்லி இருக்கார். குக்கு வித் கோமாளியில் கலந்துக்கிட்ட மணிமேகலைக்கு செம தில்லு வந்து தானே சமைக்கிறேன்னு களம் இறங்கி இருக்கார். ஆனால் சோறு வெடிச்சிருச்சுங்க... அதாவது குக்கரு வெடிச்சுருச்சுங்க!

  சோறு எப்படி வைக்கணும்னு கணவர் ஹுஸேனுடன் சேர்ந்துக்கொண்டு சமையல்கார அம்மாவிடம் போனை ஸ்பீக்கரில் போட்டு கேட்டு இருக்கார்.. அவங்க ரெண்டு தம்ளர் அரிசி, ரெண்டு தம்ளர் தண்ணின்னு சொல்லி இருக்காங்க. அப்படியே வச்சுட்டு விசில் வரும் விசில் வரும்னு பார்த்தா.. குக்கரில் இருந்து சோற்றை சுழட்டி அடிக்கற காத்துதாங்க வந்து இருக்கு.

  அந்த காத்து குக்கர் உள்ளே இருந்த சாதத்தை வீடெங்கும் விசிறி விட, மங்களகரமா சொம்பு மேல எல்லாம் பொங்க சோறு பொங்கின மாதிரி தெளிச்சு இருக்கு. கிச்சன் முழுக்க சோறு, இருக்கு... ஆனா மணிமேகலையும் உசேனும் திங்கதான் சோறு இல்லை. என்ன கொடுமை தாமு சார்!

  ஷோவில் கத்துத்தரலை

  ஷோவில் கத்துத்தரலை

  கிச்சன் முழுக்க சோறு விசிறி அடிச்சமாதிரி கிடக்க, குக்கர் எப்படி வைக்கறதுன்னு ஷோவில் கத்துத் தரலை நான் என்ன பண்றதுன்னு சொல்றார் மணிமேகலை. அவர் சொல்வது குக்கு வித் கோமாளி ஷோவை. குக்கு அக்கா வந்து சமைச்சு தரதைத்தான் மதியமும் ராத்திரியும் வச்சு சாப்பிடுவாங்களாம். காலையில் சாப்பிடறது இல்லையாம்.

  naam iruvar namakku iruvar serial: தாமரை கழுத்துல மாயண்ணந்தேன் தாலி கட்னாப்டியா?

  வீடியோ உசேன்

  மணிமேகலை சன் டிவியில் இருந்தவரை மகா புத்திசாலி மாதிரியான கெத்துடன் இருந்தார். பெரிய பெரிய ஸ்டார்ஸ் இன்டெர்வியூ என்ன, பெரிய பெரிய ஷோவை தொகுத்து வழங்குவது என்னன்னு ஆச்சரியப்பட வச்சார். டான்ஸ் மாஸ்டர் உசேனை காதலிச்சு கல்யாணம் செய்தபின் விஜய் டிவி பக்கம் இவர் காற்று அடித்தது. ஆரம்பத்தில் நல்லாத்தான் போயிகிட்டு இருந்துச்சு...நிகழ்ச்சித் தொகுப்பாளராத்தான் இருந்தார். குக்கு வித் கோமாளி இவரின் நிஜ முகத்தைக் கொண்டு வர... பாவம் உசேன் வீடியோ எடுத்து போடும் அளவுக்கு ஆகிப்போச்சு.

  குக்கு வித் கோமாளி

  குக்கு வித் கோமாளி

  விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ன காரணமோ தெரியலை இவரை ஒரு ஜோக்கர் மாதிரி ஆக்கி கோமாளியாக்கினாங்க. நடிகை ரேகாவிடம் நிறைய திட்டு வங்கியவர் மணிமேகலையாத்தான் இருப்பார். உசேன் உன்னை கட்டிக்கிட்டு என்ன பாடு படறானோ என்று கூட திட்டினார் ரேகா. சொன்ன மாதிரி உசேன் சோறு கேட்டு, இப்போ ஏண்டா கேட்டோம்னு நினைக்கற மாதிரி தரையை துடைச்சுக்கிட்டு இருக்கார்.

  என்ன மிஸ்டேக் ஆச்சு?

  என்ன மிஸ்டேக் ஆச்சு?

  குக்கர் வச்ச மணிமேகலைக்கு, உசேனுக்கும் என்ன தப்பு நடந்துச்சுன்னே தெரியலை. ரெண்டு தம்ளர் அரிசி, நாலு தம்ளர் தண்ணீர்.. குக்கு அக்கா சொன்னபடி செய்தோம்.. எதனால குக்கர் புடுங்கிக்கிச்சுன்னு தெரியலைன்னு சொல்றாங்க ரெண்டு பேரும். குக்கருக்கு என்னை பார்த்தால் எப்படித் தெரியுதுன்னு புலம்பறார் மணிமேகலை.

  கொரோனா வைரஸ்

  கொரோனா வைரஸ்

  ஹோட்டலில் போயி சாப்பிடறது ஆரோக்கியம் இல்லையே...கொரோனா வைரஸ்லாம் வேற வருதேன்னு தானே சமைக்கலாம்னு நினைச்சாராம் மணிமேகலை. பாவம் இப்படி ஆகிப் போச்சு.. இந்த அளவுக்கு மணிமேகலை சமைக்க துணிச்சலைத் தந்த குக்கு வித் கோமாளியில் குக்கர் எப்படி வைக்கறதுன்னு சொல்லித் தந்து இருக்கலாமோ?

  ஒரு பங்குக்கு இரண்டுதானே?

  ஒரு பங்குக்கு இரண்டுதானே?

  அது சரி... ஒரு தம்ளர் அரிசி என்றால் ரெண்டு பங்கு தண்ணீர் விட வேண்டாம்? எப்போதும் ஒரு பங்குக்கு ரெண்டு பங்கு தண்ணீர் விடுவதுதான் அளவு. ஆனாலும் குக்கர் புடுங்கிக்க இது மட்டுமே காரணம் இல்லை. குக்கரில் பிரஷர் உருவான உடனே வெளியில் விசிலாக வர வெயிட் போடும் துளைகளில் அடைப்பு இல்லாமல் இருக்க வேண்டும். அடைப்பு இருந்து உடனடியாக பிரஷர் வெளியேற முடியாமல் போனாலும் இப்படி நடக்க நேரிடும்.. ஏதோ நம்மளால் ஆன ஒரு டெக்னிக்கல் டிப்பு.. தெரிஞ்சுக்கிட்டா அடுத்தவாட்டி வெடிக்காதுல்ல.. குக்கர்!

  English summary
  cook aka Inru has said he cannot come to cook and only manage today. Manimegale, who attended the cook-with-comali show, cooked himself in the cooker on gas stove.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X