மொட்டை மாடி பாரு.. மாடி மேலே யாரு.. மணிமேகலை செம ஜோரு!

சென்னை: வீட்டு மாடியில் பட்டாம்பூச்சியாக பறந்தபடி கலக்கல் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மணிமேகலையின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ரசிக்காத ரசிகர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபலமாகி வருகிறது

தற்போது இருக்கும் சூழ்நிலையில் சீரியல்களை அதிகமாக விரும்பாத ரசிகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை நன்றாக ரசித்து வருகின்றனர்.

சீரியல்களில் அழுகை

சீரியல்களில் அழுகை

சீரியல்களில் அழுகையும் விரோதத்தையும் பார்த்து வந்த ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் செம ஜாலியான என்டர்டைன்மென்ட் இருப்பதால் இதை ரசித்து வருகின்றனர் .அதில் இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டு இருந்தாலும் மணிமேகலைக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது .அவரது ஒவ்வொரு செய்கையும் ரசித்து சமூக தளங்களில் அவருக்காக கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

அஸ்வின் மணிமேகலை

அஸ்வின் மணிமேகலை

இந்த நிகழ்ச்சியில் ஒருவரை மாற்றி ஒருவர் கலாய்த்துக் கொண்டு ஜாலியாக இருந்தாலும் புகழ் மணிமேகலையும் ஜோடியையும் ,அஸ்வின் மணிமேகலையின் சேட்டையும் ரசிக்காத ரசிகர்கள் இல்லை . அஸ்வினுக்கும் சிவாங்கிக்கும் காதல் ரொமான்ஸ் போய்க் கொண்டிருக்கிறது. இதுதான் இந்த ஷோவின் முக்கியமான ஹைலைட்டே..

இடையில் புகுந்து கலாய்

இடையில் புகுந்து கலாய்

இந்த நிலையில், அஸ்வினையும் ஷிவாங்கியையும் கலாய்த்து அவர்கள் இடையில் சென்று பிரிப்பது தான் மணிமேகலையின் வேலையாக இருக்கும். ஜாலியாக இவர் இப்படி செய்து கொண்டிருப்பதை பார்த்து சிவானியின் ரசிகர்கள் திட்டினாலும் ரசித்து வருகிறார்கள். சீரியல்களில் பொதுவாக ஒருவர் குடும்பத்தை எப்படி அழிப்பது கெடுப்பது என விரோதத்தை வளர்க்கும் செயல்களையே ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

நல்ல ஷோ

நல்ல ஷோ

அதனை வெறுத்து ஒதுக்கும் ரசிகர்கள் அனைவரையும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என பலரையும் டிவியில் உட்கார வைத்திருப்பது இந்த நிகழ்ச்சிதான். அதனால்தான் இந்த நிகழ்ச்சி வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் ஒளிபரப்பினாளும் டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அதில் சில வாரங்களாக மணிமேகலை இல்லாமல் இருந்ததால் அவருடைய ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்தனர்.

சூப்பர் போட்டோ

சூப்பர் போட்டோ

இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் மணிமேகலை வெளியிட்ட போஸ்ட் பார்த்ததும் குஷியாகி போன ரசிகர்கள் அவரிடம் செல்ல சண்டை போட்டு வருகின்றனர். இதற்கு முன்னர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் யூட்யூபில் போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கும் இவர் கடந்த ஒரு வாரமாக தற்போது எதிலுமே போஸ்ட் போடவில்லையாம். அதனால்தான் ரசிகர்கள் செல்லமாக கோபப்பட்டு சண்டையிட்டு இருக்கிறார்கள் .

காலில் அடிபட்டுருச்சுப்பா

காலில் அடிபட்டுருச்சுப்பா

அதிலும் இவர் காலில் சிறிது அடிபட்டு இருப்பதால் இந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை அதனாலேயே இவரை எதிர்பார்க்கும் அவருடைய ரசிகர்கள் சீக்கிரமாக வந்து விடுங்கள் எப்போது வருவீர்கள் என்று தான் அதிகமாக கமெண்டுகளை போட்டு வருகின்றனர். அதற்கு மணிமேகலையும் சீக்கிரத்தில் வந்து விடுவேன் என்று பதில் கூறியிருக்கிறார் .என அன்புக் கட்டளையிட்டு பல ரசிகர்களை போட்டிருக்கிறார்கள்.

சீக்கிரம் வாங்க மணி

சீக்கிரம் வாங்க மணி

இன்ஸ்டாகிராமில் இவருக்கு இரண்டு மில்லியன் ஃபாலோவர்ஸ் வந்ததை தொடர்ந்து இவர் தான் இதற்கு முன்னர் எடுத்து வைத்திருந்த புகைப்படத்தை கலக்கலாக வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார் இந்த போஸ்ட் பார்த்ததும் ரசிகர்கள் இந்த மாதிரி நன்றி எல்லாம் எங்களுக்கு வேண்டாம் தொடர்ந்து நீங்கள் போஸ்ட் போடுங்கள் சீக்கிரமாக குக் வித் கோமாளிக்கு வந்துடுங்க என கூறியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X