உள்ளூர் முதல் வெளிநாடு வரை.. காஸ்டிலி சரக்கா அடிக்கும் மணிமேகலை கணவர் உசேன்.. வீட்டு பார் டூர் மக்களே

சென்னை: சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளரும் நடிகையுமான மணிமேகலையும், அவரது கணவர் உசேனும் சமீபத்தில் கட்டிய புதிய வீடு சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. கிரகப்பிரவேசம் முதல் வீட்டு அலங்காரம் வரை ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் இந்த தம்பதி, தற்போது வெளியிட்டுள்ள ஹோம் டூர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணிமேகலை - உசேன் தம்பதி இணைந்து நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும், சமூக வலைதளப் பக்கங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சில நாட்களுக்கு முன்புதான் புதிய வீட்டில் காற்று வேகமாக அடித்ததால், வராண்டாவில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலி தானாக நகரும் வீடியோவை வெளியிட்டு, "வீட்டில் பேய் சுற்றுகிறது போல" என ஜாலியாக கலாய்த்திருந்தனர். அந்த வீடியோவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கலாட்டா யூடியூப் சேனலுக்காக நடிகை தீபாவுக்கு மணிமேகலையும் உசேனும் தங்களது வீட்டை சுற்றிக்காட்டியுள்ளனர். வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் காட்டிய அந்த வீடியோவில், ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது உசேனின் மினி பார் தான்.

Manimegalai s Husband Hussain Gives Explaination to a Tour of His Mini Bar To Actress Deepa

முதலில் அது ஒரு கேமிங் ரூம் என்று நினைக்க வைத்த உசேன், பின்னர் அந்த அறையின் உண்மையான ஹைலைட்டை காட்டினார். உள்ளூர் பிராண்டுகள் முதல் வெளிநாடுகளில் இருந்து வாங்கி வந்த விலையுயர்ந்த மதுபானங்கள் வரை ஏராளமான பாட்டில்களை அழகாக அடுக்கி வைத்திருந்தார். சில பாட்டில்கள் பல ஆண்டுகள் பழமையானவை என்றும், வெளிநாட்டு பயணங்களின்போது வாங்கி சேகரித்தவை என்றும் அவர் கூறினார். அருகிலேயே ஒரு மினி ஃபிரிட்ஜில் பீர் பாட்டில்களையும் குளிரூட்டி வைத்திருந்தார்.

ஹோம் பார்: இதைப் பார்த்த நடிகை தீபாவே, "விளையாட்டு அறைன்னு சொன்னீங்க... இப்படி ஒரு விளையாட்டு அறையா?" என்று சிரித்தபடியே கலாய்த்தார். ஒவ்வொரு பாட்டிலையும் பற்றி உசேன் விளக்கிக் கொண்டே செல்ல, "இது எத்தனை வருடம் பழையது? கெட்டுப் போகாதா?" என்று ஆச்சரியமாக கேள்விகளையும் எழுப்பினார். அதற்கு உசேன், "இதையெல்லாம் நான் சேகரித்து வைத்திருக்கிறேன். தினமும் குடிப்பது கிடையாது. எப்போதாவது மட்டும்தான் பயன்படுத்துவேன்" என்று விளக்கம் அளித்தார். அதுமட்டுமல்லாமல், "நம்ம ஊர் சரக்கு வேண்டாம்... வெளிநாட்டுல இருந்து வாங்கி வந்ததுல ஏதாவது ஒன்னு எங்க வீட்டுக்காரருக்கு கொடுங்க" என்று தீபா ஜாலியாக கேட்டதும், அந்த வீடியோவில் சிரிப்பலை கிளப்பியது.

Manimegalai s Husband Hussain Gives Explaination to a Tour of His Mini Bar To Actress Deepa
Photo Credit:

நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன்: இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், "இப்போ வீடு கட்டுறவங்க ஹோம் தியேட்டர், ஜிம் மாதிரி மினி பார் வைக்கிறதும் ஒரு ட்ரெண்ட் ஆயிடுச்சு" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விலையுயர்ந்த மதுபானங்களை குடிப்பதற்காக மட்டுமல்ல, அதன் அழகான பாட்டில் வடிவமைப்புக்காகவும் சேகரித்து வீட்டில் காட்சிப்படுத்தும் பழக்கம் பிரபலங்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகவும் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

ஆசைக்கு: சில மாதங்களுக்கு முன்பு சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமியும் தனது வீட்டை சுற்றிக்காட்டிய வீடியோவில் இதேபோல் விலையுயர்ந்த மதுபானங்களை சேகரித்து வைத்திருந்தது இணையத்தில் பேசப்பட்டது. தற்போது உசேனின் மினி பார் டூரும் அதேபோல் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. மணிமேகலை - உசேன் தம்பதியின் இந்த ஹோம் டூர் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீட்டின் இன்டீரியர் டிசைனை விட, உசேனின் மினி பார் தான் நெட்டிசன்களின் பேச்சாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X