மீண்டு(ம்) வந்த மனோரமா... சிங்கம் 2வில் நடித்தார்

ஆச்சியின் கின்னஸ் சாதனை
ஆச்சி என்று திரை உலகத்தினரால் அன்போடு அழைக்கப்படும் மனோரமா, மாலையிட்ட மங்கை' படத்தில் கவிஞர் கண்ணதாசனால் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இதுவரை 1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
நடிப்பா, பாட்டா ஓகே
காமெடி, குணச்சித்திர நடிப்பு, பாடல், என ஆல் இன் ஆல் ஆச்சியாக திரை உலகில் கொடி கட்டி பறப்பவர் மனோரமா. 'தில்லானா மோகனாம்பாள்' ஜில் ஜில் ரமாமணி, சம்சாரம் அது மின்சாரம், பாட்டி சொல்லைத் தட்டாதே நடிகன், சின்னக் கவுண்டர், போன்ற படங்கள் எவர்கிரீன் ஹிட்
5 முதல்வர்களுடன் நடித்தவர்
அண்ணா, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா 5 மாநில முதல்வர்களோடு நடித்த ஒரே சினிமா பிரபலம் மனோரமா தான்.
பல தலைமுறை நடிகை
எம்.ஜி.ஆர், சிவாஜி, அவரது மகன் பிரபு, ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், அவர் மகன் கார்த்திக், ரஜினி, கமல், சத்யராஜ், அஜீத், விஜய் என தலைமுறைகள் தாண்டி நடித்துக் கொண்டிருக்கிறார் ஆச்சி.
ஆறு மொழிகளில் அசத்தல்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார். கலிஃபோர்னியா யூனிவர்சிட்டி மனோரமாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
பொன்னர் சங்கருக்குப் பின் ஓய்வு
பொன்னர் சங்கர் படத்திற்கு பின்னர் மூட்டு வலி, தவறி விழுந்ததில் தலையில் ரத்த கட்டு, மூச்சு திணறல் போன்ற நோயால் அவதிப்பட்டார். இதற்காக அறுவை சிகிச்சையும் நடந்தது. இதையடுத்து கடந்த 1 வருடமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
மீண்டு வந்தார் ஆச்சி
ஒரு வருட ஓய்வுக்குப் பின்னர் சூர்யா நடிக்க ஹரி இயக்கும் 'சிங்கம் 2' படத்தில் நடித்துள்ளார் ஆச்சி. அவர் நடித்த காட்சி சென்னை தி.நகரில் உள்ள பங்களாவில் படமாக்கப்பட்டது. வழக்கம்போல் அவர் தனது காட்சிகளை மிக எளிதாக நடித்து முடித்தார். அவரை பட யூனிட்டே கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











