முத்து குளிக்க வாரியளா..மூச்சை அடக்க வாரியளா ஆச்சி பிறந்த நாள்!

சென்னை: 1000 படங்களுக்கு மேல் நடித்து சாதனை செய்த பல்சுவை நடிகை ஆச்சி மனோரமாவுக்கு இன்று பிறந்த நாள். சன் டிவி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஆச்சி மனோரமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருக்கிறது.

முத்துக்குளிக்க வாரியளா ...வா வாத்தியாரே வூட்டாண்ட நீ வாரங்காட்டி நான் வுட மாட்டேன், தில்லாலங்கடி டப்பாங்குத்து ஆட்டம் ஆடுவேன்..ஷோக்கா பாட்டுபாடுவேன்... இப்படி பல பாடல்களை பாடியும் அசத்தி, நம் உள்ளங்களை கவர்ந்த ஆச்சி மனோரமாவுக்கு இன்று பிறந்தநாள்

அந்த காலத்து சிவாஜி முதல் இந்த காலத்து சூர்யா வரை பெரும்பாலான அனைத்து நடிகர்களுடனும் நடித்து, நகைச்சுவை, குணச்சித்திரம்...அந்த காலத்தில் வில்லி வேடம் என்று ஆச்சி ஏற்காத கதாபாத்திரங்கள் அரிது என்று சொல்லலாம்.

ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் யாருக்கு அமையும் - எந்த யோகம் அமையும்

தில்லானா மோகனாம்பாள்

தில்லானா மோகனாம்பாள்

தில்லானா மோகனாம்பாள் படத்தில் சில் சில் ரமாமணின்னு இப்போ பேரை மாத்தி வச்சு இருக்கேன்ல.. அந்தப்பேரை சொல்லி கூப்பிடுங்க என்று சிவாஜியிடம் மனோரமா சொல்ல, அப்போதில் இருந்து ஜில்லு ஜில்லுன்னு கூப்பிட ஆரம்பிப்பர் சிவாஜி. நீங்க வாசிச்சாத்தன் இந்த சத்தம் வருதா. இல்லை யார் வாசிச்சாலும் இந்த நாயனத்துல இப்படித்தான் சத்தம் வருமான்னு சந்தேகம் கேட்பது என்று கலகலக்க வைத்து இருப்பார் மனோரமா.

அபூர்வ ராகங்கள்

அபூர்வ ராகங்கள்

அபூர்வ ராகங்கள் படத்தில் கமலுடன் சேர்ந்து காது வரைக்கும் வாய் கிழியுதுன்னு ராஜா கையை வச்சா பாடலுக்கு கூடவே பாடி இருப்பார். இப்படி இளம் தலைமுறையினருடன் அவர் நடித்து இருப்பதோடு, பாடல்களும் பாடி இருப்பார்.குறிப்பாக ரஜினியின் படங்களில், கமல் படங்களில் தொடர்ந்து நடித்து இருப்பர் ஆச்சி மனோரமா.

கம்முன்ன கம்மு கம்முனாட்டி கோ

கம்முன்ன கம்மு கம்முனாட்டி கோ

அப்போதே தங்கிலீஷில் ஆச்சி மனோரமா சம்சாரம் அது மின்சாரம் படத்தில் டயலாக் பேசி இருப்பார். எங்க பொண்ணு ராத்திரி 10 மணிக்கும் வரும்.. 12 மணிக்கும் வரும்.. சில சமயம் வரவே வராதது. அதுக்காக அத்த சந்தேகப்படியாமே...ஏம்பா ஆல்பர்டு பெர்னாடசு.. இதுக்கெல்லாம் சம்மதம்னா எங்க பொண்ணு வரும். இல்லேன்னா நீ கம்முன்னா கம்மு கம்முனாட்டி கோ...ன்னு வேலைக்காரி கண்ணம்மா கேரக்டரில் வந்து பேசி இருப்பார்.

வியக்க வைக்கும் மனுஷி

வியக்க வைக்கும் மனுஷி

தனது பாடி லாங்குவேஜால்.. வசனம் டெலிவரி செய்யும் ஸ்டைலால என்று கலாட்டாவும் செய்வார். குணச்சித்திர கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து கண்ணில் நீரையும் வர வாழைப்பார். வியக்க வைக்கும் மனுஷியாக திரையுலகை அரை நூற்றாண்டுக்கு மேல் கட்டியாண்ட மனோரமா ஆச்சிக்கு இன்று பிறந்தநாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X