தமிழ் புத்தாண்டு..சூப்பர் ஹிட் திரைப்படங்கள்.. போட்டி போடும் தொலைக்காட்சிகள்!
சென்னை : தமிழ் புத்தாண்டையொட்டி அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளும் புது படங்களை ஒளிப்பரப்ப உள்ளன.
Recommended Video
எப்போதும் தமிழ் புத்தாண்டு மிக அருமையான முறையில் தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த வருடம் உலகையே கொரோனா தொற்று சூழ்ந்திருப்பதால் இந்த முறை அவரவர்கள் வீட்டில் இருந்தபடியே தமிழ் புத்தாண்டை கொண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கடந்த 20 நாட்களை தங்களின் வீட்டிலேயே கழித்து வந்துள்ளனர்
இந்நிலையில் கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் இத்தனை நாட்களை தொலைக்காட்சி இணையம் மற்றும் செல்போன் உதவியுடன் நாட்களை கடத்தியது போல் இன்னும் ஏப்ரல் 30வரை இவ்வாறே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டையும் வீட்டிலே மக்கள் கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதால் இதனை குறிவைத்து முன்னணி தொலைகாட்சிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கும் சிறந்த படங்களை ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளன.

2 ஹிட் படங்கள்
விஜய் தொலைகாட்சி எப்போதும் போல இரண்டு புது படங்களை இறக்கி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காலை 11மணியளவில் கார்த்தியின் தம்பியும் 2.30 மணியளவில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்து 2020ல் பெரிய ஹிட் அடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமும் ஒளிப்பரப்பாக உள்ளது.

டகால்டி, தர்பார்
இதற்கு போட்டி போடும் அளவில் சன் தொலைகாட்சி மதியம் 3.30 மணிக்கு சந்தானத்தின் டகால்டி படத்தையும், மாலை 6.30 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தையும் ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை
முன்னணி தொலைகாட்சிகள் இரண்டும், இரண்டு புதிய படங்களை ஒளிப்பரப்ப உள்ள நிலையில், ஒரு புது படத்துடன் சேர்த்து மூன்று படத்தை ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளது ஜி தமிழ். இதில் காலை 11க்கு ஐஸ்வர்யா ராஜேஸின் கனா படமும் மதியம் 2 மணிக்கு சேரனின் திருமணம் படமும் மாலை 5 மணிக்கு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படமும் ஒளிப்பரப்ப உள்ளது.

சிவகாசி,ரெமோ
மற்றொரு முன்னணி தொலைகாட்சியான ஜெயா தொலைகாட்சி விஜய் இல்லாமல் சிறப்பு நாளா என்பதை போல விஜய் படமான சிவகாசி படத்தை காலை 10மணிக்கு ஒளிப்பரப்புகிறது மற்றும் மதியம் 1.30மணிக்கு சிவகார்த்திகேயனின் ரெமோ படம் ஒளிப்பரப்ப உள்ளது.

மகிழ்ச்சியான நாள்
அனைத்து முன்னணி தொலைகாட்சிகளை தவிர்த்து பல சிறிய தொலைக்காட்சிகளிலும் பல படங்களை ஒளிப்பரப்ப உள்ளன. பல சிறந்த படங்களின் மூலம் நல்ல பொழுதுப்போக்காக இந்நாள் இருக்கும். இன்னும் சில நாட்களை வீட்டிலே கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் இன்றைய நாள் ஒரு சிறு புத்துணர்ச்சியான நாளாக மக்களுக்கு அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











