கெட்டவனா, குடிகாரனா காட்டிட்டாங்க.. பிக் பாஸால் வாழ்க்கையே போச்சு.. கண் கலங்கிய ஷக்தி!

சென்னை: தென்னிந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான பி வாசுவின் மகன் தான் ஷக்தி. தந்தை வெற்றிகரமான இயக்குனராக இருந்த போதிலும், இவரது மகன் சக்தியால் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான பல விஷயத்தை பற்றி பேசி உள்ளார்.

இயக்குநர் பி வாசுவின் 69வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பி வாசு மற்றும் சக்தி இருவரும் இணைந்து பேட்டி கொடுத்திருந்தனர். அதில், தொட்டால் பூ மலரும் படம் வெளியான போது நானும் அப்பாவும் சேர்ந்து பேட்டி கொடுத்து இருந்தோம், கிட்டத்தட்ட 16 வருடம் ஆகிவிட்டது. அதன் பிறகு இப்போது தான் இருவரும் சேர்ந்து பேட்டி கொடுக்கிறோம்.

sakthi vaasu bigg boss interview

நடிகர் சக்தி வாசு: நான் சிறுவயதில் இருந்தே ரொம்ப ஆடம்பரமாக வளர்ந்தவன், நன்றாக படித்து இருக்கிறேன். இதனால், நான் சிறுவயதில் இருந்தே தோல்வியை சந்தித்தது கிடையாது. ஆனால், சினிமாவிற்கு வந்த பிறகு, சினிமாவிலும், சொந்த வாழ்க்கையிலும் நிறைய கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறேன். என்னுடைய 25 ஆண்டு கால சந்தோஷமான வாழ்க்கையில், இந்த எட்டு, ஒன்பது ஆண்டு, ஒட்டுமொத்த கஷ்டத்தையும் காட்டிவிட்டது. நான் பட்ட கஷ்டத்திற்கு அவர் காரணம், இவர் காரணம் என்று மற்றவர்கள் மீது குற்றத்தை சுமத்தமாட்டேன். ஆனால், பல இடத்தில் என்னை கெட்டவனாக காட்டி விட்டார்கள்.

அப்பாவின் ஆதரவு: அண்மையில் நான் ஒரு சர்ச்சையில் சிக்கினேன், பலர் கதவை பூட்டிவைத்துக்கொண்டு செய்த விஷயத்தை நான், கதவை திறந்துவைத்து செய்தேன். அதற்காக அப்படி செய்யாதவர்களே இல்லை என்று சொல்லிவிட முடியாது. அது என்னுடைய கெட்ட நேரம் அவ்வளவு தான். அப்போது, பலர் கேமராவை எடுத்துக்கொண்டு என் அறைக்குள் வந்து படம் எடுத்தார்கள், அப்போது நான் அவர்களை தடுக்கவில்லை. ஏன்என்றால், அது அவர்களின் சாப்பாடு, அந்த நேரத்திலும் என் அப்பா எனக்கு ஆதரவாகத்தான் இருந்தார்.

குடிப்பவர்களில் மூன்று வகை உண்டு, முதல் ரகம் பணத் திமிரால் குடிப்பது, இரண்டாவது மகிழ்ச்சிக்காக குடிப்பது, அப்படிப்பட்டவன் குடித்துவிட்டு, அடுத்த நாள் காலையில் தனது வேலையை பார்க்க சென்றுவிடுவான். இதில் மூன்றாவது ரகம், துக்கம், மன அழுத்தம், தோல்வி, பிரச்சனை இதற்காக குடிப்பவன், இவன் குடியை நிறுத்துவது கஷ்டம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கஷ்டத்திற்காகத்தான் குடித்தேன். அப்படி என்ன கஷ்டம் என்று கேட்கலாம், என் கஷ்டம் என்ன, என் பிரச்சனை என்ன என்பது, என் குடும்பத்திற்கும், அந்த கடவுளுக்கும் தெரியும். ஆனால், தற்போது என் அம்மா, அப்பாவிற்காகவும், என் தங்கை, என் மகனிற்காகவும் அதில் இருந்து மீண்டு வந்து இருக்கிறேன்.

அதே போல என்னை யாரும் நல்லவன் என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அனைவருக்குள்ளும் ஒரு நல்லவன் ஒரு கெட்டவன் இருப்பான். என்னை எல்லாருக்கும் பிடிக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை, ஏன் என்றால் எனக்கு நடிக்கத் தெரியாது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே நான் நடிக்கவில்லை. அப்படி அதில் நடித்தவர்கள் தானே வெற்றி பெறுகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், குடிகாரன், பெண்களை மதிக்காதவன், கோவக்காரன், திமிர் பிடிச்சவன் என்று நிறைய பேர் எடுத்துவிட்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இரண்டு வருஷம் பர்சனல் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று சக்தி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X