Malar serial: அடடே.. இங்கேயும் மொத்த சீரியல் குடும்பங்கள் சேருகிறார்களா?

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் வித்தியாசமான கதையுடன், மக்கள் விரும்பிப் பார்க்கும்படி ஒளிபரப்பாகி வருகிறது. ரொம்ப நல்ல கதையை எப்படி கையாளனுமோ அப்படி கையாண்டு திரைக்கதை நன்றாகவே இருக்கிறது.

இந்த சீரியலில் மலருக்கும், கதிருக்கும் கல்யாணம் நடக்க இருக்கிறது. இந்த கல்யாணத்துக்கு இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பேரழகி சீரியல் நாயகன், நாயகி,... திருமணம் சீரியலின் நாயகன் நாயகி என்று இந்த சேனலின் பல சீரியல்களின் நாயகன்,நாயகிகள் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்.

இப்படி ஒரே சேனலின் ஒன்றிரண்டு சீரியல்கள் ஒரு வாரத்துக்கு ஒன்றாக சேர்வதும், அப்படிப்பட்ட கதையை டெலிகாஸ்ட் செய்து மக்களை ஈர்ப்பதும் இப்போது பல சேனல்களின் டிரெண்டாகி உள்ளது. இதில் இப்போது கலர்ஸ் தமிழ் டிவியும் தப்பவில்லை.

சீரியல் பெயர் மலர்

சீரியல் பெயர் மலர்

கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியலின் கதாநாயகி பெயர்தான் மலர். இவள் கவுசிக் என்பவனை தற்காப்புக்காக கொன்று விட்டதாக சொல்கிறாள். இந்த உண்மை மலரின் தங்கை சுவாதிக்கு மட்டுமே தெரியும். இந்த நேரத்தில் மலருக்கு மாப்பிள்ளையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பவன் கதிர் என்கிற அசிஸ்டென்ட் கமிஷனர் பதவியிலிருக்கும் அழகான இளைஞன். எப்படி இருக்கும் பாருங்கள் மலருக்கு.

மன நிலை சரியில்லை

மன நிலை சரியில்லை

இந்த கல்யாணத்தை ஏத்துக்கறதா இல்லையான்னு மலர் யோசிப்பதற்குள், அப்பா அம்மா மட்டும் இல்லாமல் மாப்பிள்ளை கதிரும் கட்டினால் உன்னைத்தான் கட்டுவேன்னு மலரிடமே சொல்லிட்டு போயிடறான். அப்பா அம்மா சந்தோஷத்தை பார்த்த மலருக்கு மறுப்பு சொல்ல தோன்றவில்லை. தங்கையும் அக்கா பார்த்துக்கலாம், கவலைப்படாதேன்னு சொல்லி, கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுடறா. நடக்க வேண்டிய கல்யாண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

காதலில் கதிர்

காதலில் கதிர்

என்னதான் பார்த்து நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் என்றாலும், மலர் மீது கதிருக்கு காதல் பொங்கி வழிகிறது. எப்போதும் மலரைப் பார்த்து ஐ லவ் யூ சொல்வதும், அவளை வெளியில் அழைத்து சென்று ஆசையாக அன்பாகப் பேசுவதும் என்று மலரின் மனதில் இடம் பிடிக்க துடிக்கிறான். என்றாலும், மலருக்கு கதிரைப் பிடித்துதானே போகிறது. ஆனால், கல்யாணம் நடப்பதில் மலருக்கு விருப்பம் இல்லாமல்தான் இருக்கிறது. காரணம், அவள் தான் கொலை செய்ததை கமிஷனரிடம் மறைப்பது என்பது பெரும் குற்ற செயல் என்பதால்.

இப்போது கல்யாணம்

இப்போது கல்யாணம்

அனைத்தையும் கடந்து இப்போது மலர் பற்றிய உண்மை தெரியாமலே, கதிருக்கும், மலருக்கும் கல்யாணம் நடக்க இருக்கிறது. இப்போது ரிஷப்ஷன் வரைக்கும் இந்த கல்யாணம் வந்திருக்கும் நிலையில், கலர்ஸ் தமிழ் டிவியின் மொத்த சீரியல் குடும்பங்களின் கதாநாயகன், நாயகிகள் இந்த கல்யாணத்தில் கலந்துக்கொள்ள இருக்கிறார்களாம். எல்லா சேனல்களின் டிரெண்ட் இதுவாக இருக்கும் பட்சத்தில், இதுவும் ஒரு வெற்றிக்கான யுக்திதானே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X