மாஸ்டர் செஃப் சீசன் 2 விரைவில்… விஜய்சேதுபதி தொகுத்து வழங்குவாரா ?
சென்னை : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, பெரும் வரவேற்பை பெற்ற மாஸ்டர் செஃப் சீசன் 2 விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாஸ்டர் செஃப் தமிழ் டைட்டிலை தேவகி வென்றார்.

மாஸ்டர் செஃப்
உலக அளவில் புகழ்பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி முறையாக தமிழில் சன் தொலைக்காட்சியில் ஆரம்பமானது. வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல்ல் ஒளிபரப்பானது.

மக்கள் செல்வன்
மாஸ்டர் செஃப் தமிழியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதில் செஃப் கௌஷிக், செஃப் ஆர்த்தி, செஃப் ஹரிஷீன் ஆகியோர் இந்த போட்டியின் நடுவர்களாக இருந்தனர்.

தேவகி டைட்டில் வின்னர்
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் 14 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில், 10 பேர் எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டனர். தேவகி, நித்தியா, கிருத்திகா, வின்னி ஆகிய நான்கு பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். கிராண்ட் ஃபினாலே நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது, இதில் மாஸ்டர் செஃப் தமிழ் டைட்டிலை தேவகி வென்றார்.

மாஸ்டர் செஃப்
இந்நிலையில், மாஸ்டர் செஃப் தமிழ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், 2-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரவண பிரசாத் கூறியுள்ளார். சீசன் 2வின் போட்டியாளர்களுக்கான தேர்வுகள் இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு மாஸ்டர் செஃப் தமிழ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது சீசனையும் விஜய்சேதுபதியை தொகுத்து வழங்குவாரா என்பது தெரியவில்லை.

சீரியல்
கடந்த வாரம் மாஸ்டர் செஃப் நிறைவு பெற்று இருப்பதால் இந்த வாரம் முதல் அன்பே வா, பூவே உனக்காக, சித்தி 2 ஆகிய சீரியல்கள் நேற்று முதல் முன்பு ஒளிபரப்பாகி வந்த அதே நேரத்தில் ஒளிபரப்பாகின.


Click it and Unblock the Notifications











