கெட்ட வார்த்தை பேசினா பெண்கள் சப்போர்ட் பண்றாங்களா?.. மாஸ்டர் மகேந்திரனை விளாசிய விமர்சகர்!

சென்னை: அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் வெளியான 'லேபில்' வெப்சீரிஸில் அடியாள் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் மாஸ்டர் மகேந்திரன். ஆனால், மூச்சுக்கு முந்நூறு தடவை வாயை திறந்தாலே அவர் கெட்ட வார்த்தை பேசி நடித்ததை பலரும் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், இன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் கெட்ட வார்த்தை பேசியது குறித்து பல அம்மாக்களிடம் கேட்டேன். அதெல்லாம் தவறு கிடையாது என்றும் பொதுவா நடக்கும் விஷயம் தானே எனக்கு சப்போர்ட் செய்தார்கள் என மகேந்திரன் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது.

மகேந்திரன் பேச்சுக்கு உடனடியாக விமர்சகர்கள் தரப்பில் இருந்து ஒருவர், இதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் கெட்ட வார்த்தை பேசுவதை பெருமைப்படுத்துகிறார் (glorification) என்றும் இது தவறான விஷயம் என சுட்டிக் காட்டியுள்ள நிலையில், அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Master Mahendran heavily roasted for his bad words glorification speech on Neeya Naana
Photo Credit:

நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் விமர்சகர்கள் vs சினிமா பிரபலங்கள் பங்கேற்ற நிலையில், காரசார விவாதம் சூடுபிடித்துள்ளது.

விமர்சனமே செய்யக் கூடாது: சினிமா விமர்சனமே செய்யக் கூடாது என இந்த பக்கத்தில் இருந்து சிலர் கடுமையான வாதங்களை முன் வைத்தனர். ஆனால், அதற்கு கோபிநாத் சம்மதம் தெரிவிக்கவில்லை. விமர்சனம் இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என கோரிக்கை வைக்கலாமே தவிர விமர்சனமே கூடாது என சொல்வது தவறான விஷயம் என்றார். 1000 பேரின் உழைப்பை விமர்சகர்கள் ஒரே ஒரு வீடியோவில் காலி செய்து விடுகின்றனர் எனக் கூற பிரசாந்த் ரங்கசாமி, படத்தை சரியாக எடுக்க வேண்டியது முக்கியம் என்றும் விமர்சகர்கள் மீது குறை சொல்வது சரியல்ல என்றும் கூறினார்.

கெட்ட வார்த்தை பேசுறான்னு விமர்சிச்சாங்க: சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்து வந்த மாஸ்டர் மகேந்திரன் மாஸ்டர் படத்தில் இளம் வயது பவானியாக நடித்து மிரட்டினார். அதன் பின்னர், ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு இன்னமும் பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை. லேபில் வெப்சிரீஸில் அவர் எல்லை மீறி கெட்ட வார்த்தைகள் பேசி நடித்த நிலையில், இங்கே இருக்கும் விமர்சகர்களில் சிலர், தன்னை கடுமையாக தாக்கி விமர்சித்தனர். எனக்கு 6 மாசம் மன உளைச்சலாகி விட்டது. நான் பார்த்த தாய்மார்களிடம் இது தப்பா இருக்கான்னு கேட்டேன். அவங்க எல்லாம் அதை நார்மலாக எடுத்துக் கொள்கின்றனர். அந்த ஏரியாவில் அப்படித்தான் பேசுகின்றனர் என வடசென்னை பகுதி பற்றி பேச அதை விஜய் டிவி நிர்வாகம் பீப் செய்துவிட்டது.

விளாசிய விமர்சகர்: அந்த ஏரியா என மீண்டும் தவறாகவே பேசுகிறார் மகேந்திரன் என்றும் கெட்ட வார்த்தைகளை படங்களில் பேசுவது தவறான விஷயம் தான். அதை க்லோரிஃபிகேஷன் செய்வதும் தவறான விஷயம் தான் என மகேந்திரனின் பேச்சை விமர்சகர் ஒருவர் விளாசிய நிலையில், அதை சோஷியல் மீடியாவில் பலரும் ஷேர் செய்து மாஸ்டர் மகேந்திரன் ஏன் இப்படி தெளிவு இல்லாமல் பேசி வருகிறார் என்றும் பெண்களை மையப்படுத்தி தான் பல கெட்ட வார்த்தைகளையே இந்த சமூகத்தில் உருவாக்கி வைத்துள்ளனர். அது குறித்து இவர் அவர்களிடமே கேட்பது எல்லாம் அசிங்கமாக இல்லையா என திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X