பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறீர்களா? ரசிகரின் கேள்விக்கு மாஸ்டர் நடிகர் பதில்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறீர்களா என்ற ரசிகரின் கேள்விக்கு மாஸ்டர் நடிகர் பதில் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான வேலைகள் களைக்கட்டியுள்ளன. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் தான் தொடங்கும் என அரசல்புரசலாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான லோகோ புரமோ நேற்று வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் விரைவில் நிகழ்ச்சி தொடங்கி விடும் என ஹேப்பியாகியுள்ளனர்.

கமல்தான் தொகுத்து வழங்க போகிறார்

கமல்தான் தொகுத்து வழங்க போகிறார்

இந்த சீசனை நடிகர் சிம்புதான் தொகுத்து வழங்க உள்ளார் என கடந்த சீசன் முடிந்தது முதலே தகவல் வெளியானது. ஆனால் அதனை மறுத்தும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க போகிறார் என்பது கடந்த சில தினங்களுக்கு முன்பு உறுதியானது.

நாள்தோறும் ஒரு பட்டியல்

நாள்தோறும் ஒரு பட்டியல்

நேற்று கமல் பங்கேற்ற லோகோ புரமோவையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நிகழ்ச்சி தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீயாய் ஈடுபட்டுள்ளது நிகழ்ச்சி குழு. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் பிரபலங்கள் என நாள்தோறும் ஒரு பட்டியல் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.

பிரபலங்கள் பெயர் பட்டியல்

பிரபலங்கள் பெயர் பட்டியல்

அந்த வகையில் அண்மையில் நடிகர் அபினய், நடிகை சூசன், நடிகை சாந்தினி, நடிகை மைனா நந்தினி, விஜய் டிவி பிரபலம் சுனிதா ஆகியோரின் பெயரும் அடிபட்டு வருகிறது. மேலும் சீனியர் நடிகைகள் என வடிவுக்கரசி, தீபா ஆகியோரி பெயர்களும் நடிகர் ரமேஷ் கண்ணாவின் பெயரும் இடம்பெற்று வருகிறது.

நாட்டாமை படத்தில்..

நாட்டாமை படத்தில்..

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறீர்களா என்ற கேள்விக்கு மாஸ்டர் பட நடிகர் பதில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் மகேந்திரன். நாட்டாமை படத்தில் ஒரு காட்சியில் குட்டி பையனாக பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியிருப்பார்.

விஜய்யின் மாஸ்டர் படத்தில்

விஜய்யின் மாஸ்டர் படத்தில்

தொடர்ந்து பாண்டிராஜ், வடிவேலு என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். விழா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் பாண்டிராஜ். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் மகேந்திரன். ஆனால் எந்த படமும் அந்த அளவுக்கு கைக் கொடுக்கவில்லை. இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார் மகேந்திரன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறீர்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறீர்களா?

இளம் வயது பவானியாக நடித்திருந்தார் மகேந்திரன். இதன்மூலம் மீண்டும் பிரபலமானார். இந்நிலையில், மாஸ்டர் மகேந்திரன் சமூக வலைத்தள பக்கத்தில் நேரலையில் ரசிகர்களிடம் பேசும்போது, ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைகிறீர்களா என கேட்க, அதற்கு மகேந்திரன், வாழ்க்கையே ஒரு பிக்பாஸ் தான் என பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X