Bigg boss 3 tamil: மதுமிதா மவுன விரதம் கலைஞ்சு போச்சு டும்டும்டும்!

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 3 வது சீசன் அற்புதமாக களைக்கட்ட ஆரம்பிச்சுருச்சு. நாட்டாமை டாஸ்க் இந்த வாரம் முழுக்க
ஒளிபரப்பாகிட்டு இருக்கு. எல்லாரும் விரும்பிப் பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் இப்போது நடப்பவை அனல் பறக்கும் நிகழ்வுகளாக இருக்கின்றன.

உங்களுக்கு நீங்களே கன்டென்ட் தயார் செய்யறீங்க... நாங்க குடுக்கறோம் பாருங்க டாஸ்க், அதுல எங்களுக்கு கன்டென்ட் கிடைக்கும் என்று.பிக் பாஸ் இந்த நாட்டாமை டாஸ்க்கை கொடுத்திருக்காங்க போலும்.

ஆளாளுக்கு துள்ளறாங்க, கத்தறாங்க...இதில் கீரிப்பட்டி, பாம்புப் பட்டி ஆகிய இரண்டு ஊர் நாட்டாமைகளாக சேரனும், மதுமிதாவும் நியமிக்கப் படுகிறார்கள்.சபாஷ் நல்ல போட்டி என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

 மதுமிதா சேரன்

மதுமிதா சேரன்

அதிகம் பேசாத சேரனும், மவுன விரதம் முடிந்தாலும் மவுனத்தை கடைப்பிடிக்கும் மதுமிதாவும் இரு ஊரின் நாட்டாமைகள். ஆனால், டாஸ்க்குன்னு வந்துட்டா விட்டுடக் கூடாதுன்னு மதுமிதா முழு நாட்டாமையாக மாறி விடுகிறார்.அவரின் புடவைக் கட்டும், நடையும், பெரிய பொட்டு, சிவந்த உதடுகளும் என்று நன்றாக பொருந்தி இருக்கிறது மதுமிதாவுக்கு. இதே போல சேரனுக்கும் பட்டு வேஷ்டி, சட்டை, புலி நகம் பதித்த டாலர் என்று கெட்டப் மிகப் பொருத்தம்.

 நாளைக்கு பால்

நாளைக்கு பால்

ரேஷ்மா பசிக்குது சென்று கிச்சன் டீமிலிருக்கும் மதுமிதாவிடம் கேட்க, உங்க ஊர் சேரன் சார் நாட்டாமை கிட்ட போயி இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்..இந்த ஊரில் நீதான் ஃபூல் இந்த டாஸ்க்கை சொல்லிட்டு வான்னு மதுமிதா நாட்டாமை சொல்றாங்க. இன்னிக்குத்தான் எனக்கு பொறந்த நாள்.. இன்னிக்கு இந்த டயலாக்கை சொலல சொல்றேன்னு சொன்ன ரேஷ்மா போயி சொல்லிட்டு வந்துட, அசந்து போயி ரொம்ப நேரம் ஒண்ணும் புரியாம நிக்கறார் சேரன். டாஸ்க்குன்னு சொல்லிட்டும் வந்துடறாங்க ரேஷ்மா.

 ரேஷ்மாவிடம் கேட்கிறார்

ரேஷ்மாவிடம் கேட்கிறார்

எதுக்கு அப்படி சொல்லிட்டு வந்தேன்னு சேரன் வந்து கேட்க, எனக்கு பசிச்சுது சாப்பாடு கேட்டேன்... நாட்டாமை சொன்ன டாஸ்க்கை செய்தேன்னு ரேஷ்மா சொல்லியும் பிரச்சனை வருது.என் பிறந்த நாள் கேக்கையே என்னை சாப்பிட விடமாட்றீங்கன்னு ரேஷ்மா புலம்ப, சாரிம்மா மன்னிச்சுருன்னு பாவமா சொல்லிட்டு போறார் சேரன். மதுமிதா செய்த வேலைக்கு ரேஷ்மா என்ன செய்வார் என்றாலும்...டாஸ்க் ஓகே.மன்னிப்பு கேட்டது பாவமாகத்தான் இருந்தது.

 மவுன விரதம்

மவுன விரதம்

மதுமிதா தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மவுன விரதம் இருக்கிறார். அப்போது சைகையில்தான் பேசுவார். நாட்டாமை கெட்டப்பில் இருந்த மதுமிதாவை சாண்டி, சாக்ஷி டாஸ்கில் கலாய்ச்சுட, எடுத்தாங்க பாருங்க புது அவதாரம். சந்தானம் ஒரு படத்தில் சொல்வார். பார்க்கறதுக்குத்தான் டீசண்ட் மாதிரி... வாயைத் திறந்தா கூவம் ஆறு மாதிரின்னு.. அது மாதிரி சும்மா கொட்டித் தீர்க்கறார். மவுன விரதம் கலைஞ்சு போச்சு டும்டும்டும்... வாயைத் திறந்த மதுமிதா வார்த்தைகள் கேட்டாச்சு டும்டும்டும்!

ஆத்தாடி மாரியம்மா.. சோறு ஆக்கி வச்சேன் வாடியம்மா...ஆழாக்கு அரிசியை பாழாக்க வேணாம் தின்னுபுட்டு போடியம்மான்னு சாண்டி, ஆத்தா இறங்கிருச்சான்னு கேட்டு மன்னிப்பு கேட்கற மாதிரி ஆகிப்போச்சுங்க.

இந்த வாரம் கமல் சாருக்கு வேட்டையாடு விளையாடுதான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X