டிவியில் மே தின திரைப்படங்கள்: வீரம், வல்லினம்,தெகிடி, கல்யாண சமையல் சாதம்
உழைப்பாளர் தினமான 'மே' தினத்தில் தமிழ் தொலைக்காட்சிகளில் வீரம், தெகிடி, வல்லினம் போன்ற சிறப்புத் திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன.
விடுமுறை தினமான மே தினத்தில் ரசிகர்களை வீட்டிற்குள் கட்டிப்போட தொலைக்காட்சி சேனல்கள் சிறப்பு திரைப்படங்கள்,சிறப்பு நிகழ்ச்சிகளை போட்டி போட்டு ஒளிபரப்புகின்றன.

விஜய் டிவியில் புதுப்படங்கள்
மே தின சிறப்புத் திரைப்படங்களாக, விஜய் டிவியில் பிரசன்னா, லேகா வஷிங்டன் நடித்த கல்யாண சமையல் சாதம் திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. புத்தம் புதிய திரைப்படமான தெகிடி திரைப்படமும், மாலையில் ஆர்யா, நயன்தாரா நடித்த ராஜா ராணி திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

சன் டிவியில் வீரம்
மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளை ஒட்டி சன் டிவியில் வீரம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. காலையில் விஜய் நடித்த கில்லி, மதியம் ஜெயம் ரவி நடித்த உனக்கும் எனக்கும் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

கலைஞர் டிவியில்..
கலைஞர் டிவியில் புதுப்படங்களைக் காணோம். ஜீவா, கார்த்திகா நடித்த கோ' திரைப்படமும், அங்காடித் தெரு திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.

அஜீத்தின் வரலாறு
அஜீத் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ராஜ் டிவியில் அஜீத் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பொன்மாலைப்பொழுது திரைப்படம் ஒளிபரப்புகின்றனர்.

ஜெயா டிவியில்
மே தினத்தை ஒட்டி ஜெயா டிவியில் சூர்யா நடித்த மாற்றான், நகுல் நடித்த வல்லினம் திரைப்படம் ஒளிபரப்பாகிறது. என்ன காரணமோ தெரியவில்லை அஜீத் நடித்த ஆரம்பம் பற்றி எந்த தகவலையும் காணோம்.

விஜய் டிவியின் 'தல' டே
அஜீத் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 'தல' டே என்ற சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது விஜய் டிவி.

நயன்தாரா ஸ்பெஷல்
விஜய் டிவியில் என்றென்றும் நயன்தாரா என்ற தலைப்பில் ஸ்பெஷல் பேட்டி ஒளிபரப்பாகிறது.

ஆர்யா பேட்டி
அதே சமயம் சன்டிவியில் ஆர்யாவின் ஸ்பெஷல் பேட்டி ஒளிபரப்பாகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் ஒருநாள் தொழிலாளர்களாக மாறி ஹோட்டல் நடத்துகின்றனர் இதுவும் மே தினத்தன்று ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











