மே தின சிறப்புத் திரைப்படம்: கும்கி, ஏழாம் அறிவு

By Mayura Akilan

தமிழ் தொலைக்காட்சிகளில் தொழிலாளர்கள் தினமான மே தினத்தை புத்தம் புதிய திரைப் படங்களுடன் கொண்டாடுகின்றனர்.

விடுமுறை தினங்கள் என்றாலே சேனல்களுக்குக் கொண்டாட்டம்தான் புத்தம் புதிய திரைப்படம், சிறப்பு நிகழ்ச்சிகள் களை கட்டும். மே 1 ம் தேதி சிறப்புத் திரைப்படங்களாக ஏழாம் அறிவு, நண்பன், கும்கி போன்ற திரைப்படங்கள் ஒளிபரப்பாகிறது.

இதைத் தவிர புத்தம் புதிய திரைப்படங்களின் சிறப்புக் கண்ணோட்டமும் ஒளிபரப்பாகிறது.

சன் டிவியில் ஏழாம் அறிவு

சன் டிவியில் ஏழாம் அறிவு

தனுஷ் நடித்த வேங்கை காலை 11 மணிக்கும் அஜீத் நடித்த மங்காத்தா பிற்பகல் 2 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டிவியில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடித்த ‘ஏழாம் அறிவு' திரைப்படம் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

விஜய் டிவியில் கும்கி

விஜய் டிவியில் கும்கி

விக்ரம் பிரபு - லட்சுமி மேனன் நடித்த கும்கி திரைப்படம் விஜய் டிவியில் மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பகல் 11 மணிக்கு நண்பன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

சூது கவ்வும், எதிர்நீச்சல்

சூது கவ்வும், எதிர்நீச்சல்

விஜய் டிவியில் சூது கவ்வும், தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படங்களின் சிறப்புக் கண்ணோட்டம் ஒளிபரப்பாகிறது. எதிர்நீச்சல் படக்குழுவினரான சிவகார்த்திக்கேயன், தனுஷ் ஆகியோருடன் சிறப்பு பேட்டியும் ஒளிபரப்பாகிறது.

‘தல’ பிறந்த நாள்

‘தல’ பிறந்த நாள்

அஜீத் பிறந்தநாளை விஜய் டிவி கொண்டாடுகிறது. இதன் சிறப்பு நிகழ்ச்சியாக ‘ஹேப்பி பர்த்டே தல' என்ற நிகழ்ச்சி மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

கலைஞரில் புத்தகம், பையா

கலைஞரில் புத்தகம், பையா

கலைஞர் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கு புத்தம் புதிய திரைப்படம் புத்தகம் திரைப்படமும், மாலை மணிக்கு கார்த்தி தமன்னா நடித்த பையா திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது.

எந்தப் படத்தைப் பார்க்க?

எந்தப் படத்தைப் பார்க்க?

இந்த அறிவிப்பை பார்த்த உடன் எல்லா படமும் நல்ல படமா இருக்கே எந்தப் படத்தை பார்ப்பது என்று குழப்பமாக இருக்கிறதா? ரிமோட் எதுக்கு இருக்கு விளம்பர இடைவேளையில் மாத்தி மாத்தி பார்க்கலாமே? ( அது கரண்ட் இருக்கணுமோ?)

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X