Bigg boss 7: அர்ச்சனா பெற்றோர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட மாயா.. பூர்ணிமா, விஷ்ணுவும் சரண்டர்!
சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி இன்றைய தினம் 79வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.
இதையொட்டிய பிரமோக்கள் வெளியான நிலையில் இன்றைய தினம் ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது.
இதில் அர்ச்சனா, விஜய் வர்மா, பூர்ணிமா ஆகியோரின் பெற்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்றதை பார்க்க முடிந்தது.

பிக்பாஸ் தமிழ் 7 ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் பிரம்மாண்டமான அளவில் துவங்கப்பட்டு இன்றைய தினம் 79வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கடந்த சீசன்களை போலவே நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை போலவே கமல்ஹாசனுக்கும் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அடுத்தடுத்த வாரயிறுதி எபிசோட்களில் கலந்துக் கொள்ளும் அவர் சில போட்டியாளர்களை சுதந்திரமாக நடைபோட விட்டுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அடுத்தடுத்த பிரமோக்கள்: சிலரது செயல்பாடுகளை கமல்ஹாசன் கேள்விக்குட்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து ரசிகர்களால் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடிகர் கமல்ஹாசன் இந்த சீசனுடன் விலகவுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினத்திற்கான அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இன்றைய தினம் போட்டியாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டது.
ஃபிரீஸ் டாஸ்க்: இந்த வாரத்தில் அடுத்தடுத்த போட்டியாளர்களின் பெற்றோர் நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் அர்ச்சனா, பூர்ணிமா, விஜய் வர்மா உள்ளிட்டவர்களின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக போட்டியாளர்களிடையே ஏற்பட்ட சண்டைகள், சச்சரவுகள் இன்றைய தினத்தில் எதிரொலித்ததை பார்க்க முடிந்தது.
அர்ச்சனா பெற்றோரிடம் மாயா மன்னிப்பு: நிகழ்ச்சியில் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்ளுமாறு விக்ரமிற்கு அர்ச்சனாவின் அப்பா பாடம் எடுத்ததை பார்க்க முடிந்தது. அதற்கு அவர் மன்னிப்பு கேட்டதை பார்க்க முடிந்தது. முன்னதாக அனைத்து ஹவுஸ்மேட்ஸ் இடையில் அமர்ந்து அவர் பேசியதை பார்க்க முடிந்தது. தான் ஏதாவது தவறு செய்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என்று அவரிடம் கூறிய மாயா, இதற்காக அவரது காலில் விழுந்ததையும் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் காண முடிந்தது.
பூர்ணிமா, விஷ்ணுவும் சரண்டர்: அவரை தொடர்ந்து பூர்ணிமாவும் தொடர்ந்து விஷ்ணுவும் ஏதாவது தவறு செய்திருந்தால் சாரி என்று கேட்கின்றனர். இதையடுத்து மாயா, இன்னும் 20 நாட்கள் தவறு செய்துவிட்டு மொத்தமாக காலில் விழுந்துவிடுவதாக கூறுகிறார். இன்னும் 20 நாட்களில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி நிறைவடைவதை அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அர்ச்சனாவுடன் மாயா, பூர்ணிமா மற்றும் விஷ்ணுவிற்கு அடிக்கடி சண்டைகள் ஏற்பட்ட நிலையில் அவர்கள் தற்போது அர்ச்சனா பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











