பலே...பலே மாயக்கா...இதோ நானும் களத்துல இறங்கறேன்....!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் ஜனனிக்கு இப்போது எல்லாராலும் கஷ்டம் வருது.
புருஷன் சந்தோஷ் என்னடான்னா ஜனனியை டைவர்ஸ் பண்ணிட்டு , காதலியை கல்யாணம் செய்துக்க துடிக்கிறான்.
சந்தோஷின் தம்பி நவீன் அண்ணி ஜனனியின் தங்கச்சி தன்னை அனாமிகாவா நடிச்சு ஏமாத்திட்டான்னு ஜனனி மேல் கொலை காண்டில் இருக்கான்.

அனிதா அனாமிகா
அனிதா அனாமிகான்னு ஒரு பேரில், அக்கா ஜனனியின் புருஷனோட தம்பி நவீனுக்கு முகம் காமிக்காமல் பேச, காலப் போக்கில் நவீனுக்கும், அனாமிகா மேல காதல் வந்துருது. அனிதாவும் அனாமிகவா நவீனை உண்மையாவே காதலிக்க ஆரம்பிச்சுடறா.

அனாமிகாவும் நவீனும்
அனாமிகாவும், நவீனும் சந்திக்கலாம்னு முடிவு செய்து ,மீட் பண்ணப்போக,அங்கு அனாமிகாவா நிஜமா ஒரு பொண்ணு நவீனை சந்திக்கறா.அனிதா ரொம்ப அப்செட்டாகி வீட்டுக்கு வந்துட்டறா.

அக்கா ஜனனிக்கு
அனாமிகா விஷயம் ஜனனிக்கு தெரிஞ்சு,தங்கை அனிதாவை விசாரிசிக்கலாம்னு பார்த்தா அவ சந்தேகப்பட்டது சரியாப்போச்சு.அனிதாதான் அனாமிகாவா பேசி இருக்கா. ஆனா,நவீன் எக்ஸ்சாம் எழுதின உடனே இதை சொல்லலாம்... ஆனால் ,அனாமிகாவா வந்தது யாரா இருக்கும்னு ஜனனிக்கு சந்தேகம்.ஒரு வேளை மாயா அக்கா ஏதாவது செட் பண்ணி இருப்பங்ககளான்னு சந்தேகம் வருது.

ஜனனியும் தங்கையுடன்
அனாமிகா விஷயத்தில் தங்கையோட சேர்ந்து அக்கா ஜனனியும் தன் வாழ்க்கையில் விளையாடிட்டதா நவீன் தன் அண்ணன் சந்தோஷிடமும் சொல்லிடறான். இப்போ சந்தோஷ், நவீன் ரெண்டு பேரும் ஜனனியை வெறுக்கறாங்க.

யாரு அனாமிகாவா
யாரு அனாமிகாவா வந்து இருப்பாங்கன்னு கண்டு பிடிச்சு நவீன்கிட்ட சொன்னா, நவீனுக்கு நம்ம மேல இருக்கும் கோவம் தணியும்னு ஜனனி நினைக்கறா. அப்போதான் மாயா அக்காவும், அவங்க தங்கை ஆர்த்தியும் பேசிக்கறதை எதேச்சையா கேட்கறா... ஆர்த்தியை நவீனுக்கு கல்யாணம் செய்து வச்சு, சொத்து முழுவதையும் காப்பத்த நினைக்கும் மாயாக்காவின் உண்மை முகம் தெரியுது ஜனனிக்கு.
உண்மை தெரிஞ்சு போச்சு...அடுத்தது என்ன செய்யறதுன்னு நான் பார்த்துக்கறேன்னு சொல்லிக்கறா ஜனனி.


Click it and Unblock the Notifications











