என்னடா இது.. ஜவ்வா இழுத்துட்டு.. மாயனுக்கும் தேவிக்கும் முதலிரவு... தட்றோம்... தூக்கறோம்!

mayan devi first night in our imagination

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன் எப்போ டெஸ்டில் பாசாகறது... எப்போ அவனுக்கும் தேவிக்கும் முதலிரவு நடக்கறது? அதனாலதான் நாம களம் இறங்கி ரெண்டு பேரையும் தட்றோம்... தூக்கறோம்.. முதலிரவை நடத்தி வைக்கறோம்!

அட ஆமாங்க.. எத்தனை நாளைக்கு சீரியல் எடுப்பவர்கள் கற்பனையையே நாம் பார்த்துகிட்டு உட்கார்ந்து இருக்கறது? நாமும் கொஞ்சம் கதையில் புகுந்து கசமுசா பண்ணலாம். கசமுசான்னாலே ஜாலிதானேங்க..!

அதனால நத்திங் சீரியஸ்...மாயனுக்கும் தேவிக்கும் முதலிரவுக்கு தேவையான செட்டப் ஒரு பக்கம்...மாயனுக்கும் தேவிக்கும் நடக்கும் கற்பனை உரையாடல் ஒரு பக்கம்னு இன்னிக்கு போகுது. இப்படி பேசிக்கொள்ளும் மாயன் தேவியை என்ன சொல்லி தூக்கறது? வெயிட் அண்ட் ஸீ...!

பாம்பே டாடி குஸ்தி டாடி

பாம்பே டாடி குஸ்தி டாடி

மாயன் வழக்கம் போல ஸ்கூல் பேக் எடுத்துக்கிட்டு, பாம்பே டாடி, குஸ்தி டாடியைப் பார்க்க புறப்படறான். என்னடா எங்க கிளம்பிட்டன்னு தேவி கேட்கிறாள். என்னங்க ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்கறீங்க... நீங்கதானே டெஸ்டில் பாஸ் பண்ணினா நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டுன்னு சொன்னீங்க.அதான் பாம்பே டாடிகிட்ட படிக்க போறேன்னு சொல்றான். நீ ரெண்டு நாளா படிச்ச லட்சணம் பத்தி மாமா சொன்னாங்க. செம்மை + மொழி செம்ம மொழின்னு சொன்னியாமே....ஏண்டா இப்படி கடுப்பேத்திட்டு வந்து இருக்கேன்னு தேவி கேட்கிறாள்.

தமிழ் செம்ம மொழிதாங்க

தமிழ் செம்ம மொழிதாங்க

ஏங்க அவங்களுக்குத்தான் என்னைய பத்தி தெரியலை.. உங்களுக்கு என்னைய தெரியாதா? மதுரையில் தமிழ் மொழின்னாலே செம்ம மொழிதானேங்கன்னு மாயன் சொல்றான். விட்டா இன்னும் இப்படித்தான் பேசி சமாளிப்பே...இனிமே உனக்கு அங்கே பாடம் கிடையாதுன்னு தேவி சொல்ல... என்னங்க பிளானை மாத்திக்கிட்டீங்களான்னு கேட்கறான் மாயன். ஆமாண்டா... பிளானை மாத்தலை...பிளான் வேணாம்னு விட்டுட்டேன்னு சொல்றா.

ராத்திரிக்கு தேவையானது

ராத்திரிக்கு தேவையானது

என்னங்க.. பிளானை விட்டுட்டீங்களா? அப்டீன்னா நம்ம ஃ பர்ஸ்ட் நைட்டுக்கு தடை இல்லே அப்படித்தானேன்னு கேட்கறான் மாயன். கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனா, நீ ஒன்னு செய்யணுமேன்னு தேவி சொல்கிறாள். சொல்லுங்க ராத்திரிக்கு தேவையானது எதுனாச்சும் வாங்கிட்டு வரணுமான்னு கேட்கறான். டேய்.. அதே மூடில் இருப்பியா.. அது இல்லடா...என்று தேவி இழுக்கிறா.

சொல்லுங்க செய்யறேன்

சொல்லுங்க செய்யறேன்

என்ன செய்யணும் சொல்லுங்க செய்யறேன்னு மாயன் கேட்கிறான். படிப்பு உனக்கு வராதுன்னு ஆகிப்போச்சுன்னு தேவி சொல்ல... ஆமாங்க..ரொம்ப கஷ்டம்.. குஸ்தி கையை நீட்டச் சொல்லி செம்ம அடின்னு கையை ஊதறான். அதனால்தாண்டா நீ படிக்க எல்லாம் வேணாம். பேசாம நான் படிச்சேன் பார்த்தியா அதை எல்லாம் மறக்க வச்சுருன்னு சொல்றான். என்னங்க காமெடி பண்றீங்கன்னு மாயன் சொல்லிட்டு எனக்கு நீங்க ஆரம்பிக்கும்போதே தெரியும். இப்படித்தான் என்னை மடக்குவீங்கன்னு. பேசாம பாம்பே டாடிகிட்டே போயி படிச்சுட்டு வரேன்ங்க..

உனக்கு சான்ஸ் இல்லடா

உனக்கு சான்ஸ் இல்லடா

மாயன் புறப்பட உனக்கு சான்ஸ் இல்லடா... நீ மக்கு. படிப்பிலயும் மக்கு.. வாழக்கை பாடத்திலும் மக்கு. நான் படிச்சதை என்னை மறக்க வைன்னு சொன்னேன். நீ இப்படியே தள்ளி தள்ளி நின்னுகிட்டு இருந்தா நான் எப்படிடா என் படிப்பை மறக்காம இருப்பேன். நீ தள்ளி நின்னா எனக்கு இந்த தமிழ் எழுத்து எத்தனை மாத்திரைன்னுதான் கேட்கத் தோணும்னு முணுமுணுக்கறா. என்னங்க சொன்னீங்க.. இல்ல இப்ப என்னமோ சொன்னியளேன்னு மாயன் கிட்டே வர..

டேய்.. உனக்கு சான்ஸ் அவ்ளோதாண்டா என்று மறுபடியும் எஸ்கேப் ஆகிட்டா தேவி. இப்படியே பார்த்தால் கடுப்பாகுதுல்ல .. நாளைக்கு இவங்க ரெண்டு பேரையும் தட்டித் தூக்கி முதலிரவை நாம நடத்தறோம்... ஓகேவா? .. டபுள் ஓகே பாஸ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X