Naam Iruvar Namakku Iruvar Serial: தம்பிக்கு இந்த பொண்ணா? தங்கச்சிக்கு இவனா?

சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில், மாயன் நல்லா சிரிக்க வைக்கிறான்.

மாயனாகவும் ,டாக்டர் அரவிந்தாகவும் ஆர்.ஜெ.செந்தில் டபுள் ரோல் பண்றார்.மாயன் ரவுடி வேஷத்தில் சிரிக்க வச்சாலும், அதுக்கு நேர்மாறான டாக்டர் அரவிந்த் ரோலும் நல்லாவே செய்து இருக்கார்.

செந்திலுக்கு மதுரை பாஷை ரொம்ப நல்லா சரளமா வருது. கேட்கவும் காதுக்கு இதமா இருக்கு. மாயனின் இரட்டை கலர் வேஷ்டி, ரெண்டு காலர் சட்டை... ரெண்டு கூலிங் கிளாஸ்னு சும்மா கலக்கறார்.

பிடிக்காத தாலி

பிடிக்காத தாலி

அரவிந்துக்கும் தேவிக்கும் நடக்க இருந்த கல்யாணத்தில்தான் மாயன் புகுந்து தம்பி கட்ட வேண்டிய தாலியை தேவிக்கு மாயன் கட்டிடறான். அரவிந்துக்கு இன்னொரு அத்தை பெண் தாமரையை கட்டாய கல்யாணம் செய்து வச்சுடறாங்க. பார்த்தால் தேவிக்கு பிடிக்காத கல்யாணம். இங்கு அரவிந்தும் பிடிக்காத கல்யாணம். அதனால ரெண்டு தம்பதியும் விவாக ரத்து செய்யும் எண்ணத்தில் இருக்காங்க. அதற்கான நடவடிக்கைகளும் எடுத்துக்கிட்டு இருக்காங்க.

மாயன் தேவி

மாயன் தேவி

அரவிந்த் தாமரையை ஏத்துக்கிட்டு,அவளுடன் வாழ தயாரா இருக்கான்.ஆனால், மாயன் தேவி மீது ஆசையா இருந்தும், தேவியின் வீட்டில் யாருக்கும் மாயனை பிடிக்கலை. தேவிக்கும் வீட்டார் பேச்சைத் தட்ட மனசில்லை.தேவியின் தம்பி லண்டனில் படிச்சு வந்தவனுக்கு மாயனை கண்டாலே பிடிக்கலை. இவன்தான் மாயன் எப்போது இந்த வீட்டை விட்டு போவான்னு அடிக்கடி வெறுப்பா பேசிக்கிட்டே இருக்கான்.

மாயனின் தங்கை

மாயனின் தங்கை

இந்த சமயத்துலதான் தங்கள் யார்னு தெரியாமலே தேவியின் தம்பி லண்டனில்படிச்சுட்டு வந்தவனுக்கு, மாயனின் தங்கை உள்ளூர் பெண் மீது ஆசை வந்துருது. காதல் வந்துருது. மாயன் வீட்டோடு மாப்பிள்ளை என்பதால் மாயனின் தன்கைதான் இவன்னு அவனுக்கு தெரியலை. இவன் லண்டனில் படிச்சுட்டு வந்ததுனால அண்ணியின் தம்பிதான் இவன்னு மாயனின் தங்கைக்கு தெரியலை.

தேவியின் தம்பியும்

தேவியின் தம்பியும்

மாயனை அவன் தங்கச்சி,அண்ணா நான் ஒரு பையனை லவ் பண்றேன்.நீதான் பேசி வீட்டுல சொல்லி இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கணும். அதுக்கு முன்னால அவனை வந்து சந்திச்சு பேசுன்னு கேட்டுக்கறா. இதே மாதிரி, அக்கா இந்த ஊர் பொண்ணு ஒருத்தியைத்தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.அவகிட்ட நீ வந்து முதலில் பேசுன்னு தேவியைக் கூப்பிடறான்.

பாருங்க கதை எப்படி போகுது.. வீட்டோட மாப்பிள்ளையா போயி, மாப்பிள்ளைக் குடும்பத்தைக் கூட தெரிஞ்சுக்காம இருக்கான் ஒரு மச்சான். இரண்டு பேரும் சந்திச்சு பேரதிர்ச்சி ஆகும் காட்சியை இன்னிக்கு இரவு பாருங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X