Just In
- 56 min ago
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- 1 hr ago
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
- 1 hr ago
பாலாஜி முருகதாஸுக்கு என்னவொரு வரவேற்பு பாருங்க.. மேள தாளத்துடன்.. மரண குத்தாட்டம்.. பக்கா மாஸ்!
- 1 hr ago
ஜாமீன் கிடைச்சு 2 நாளாச்சு.. 140 நாளுக்குப் பிறகு சிறையில் இருந்து வர காத்திருக்கும் ராகிணி திவேதி!
Don't Miss!
- Finance
லாபத்தில் 1,300% வளர்ச்சி.. அசத்தும் JSW ஸ்டீல்..!
- Sports
வேற வழியே இல்லை.. அந்த ஸ்ரேயாஸ் ஐயரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.. ஆஸி. வீரர் அதிரடி!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- News
திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Automobiles
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Naam Iruvar Namakku Iruvar Serial: செம்மை + மொழி = செம்ம மொழியா? மாயன் காமெடி!
சென்னை: பரீட்சையில் பாஸ் பாண்ணினால்தான் மாயனுக்கு முதலிரவுன்னு தேவி சொல்லிட்டா. மாயனும் ஸ்கூல் பேக் மாதிரி மாட்டிகிட்டு, பாம்பே டாடி, குஸ்தி டாடிகிட்டே படிக்க கிளம்பிட்டான். டீச்சர்னா சும்மாவா... எதிர்பார்க்காம கேள்வி கேட்டால்தானே அவங்க டீச்சர்?
குஸ்தி அப்பா கேட்கிறார்.. நேத்து படிச்சது எல்லாம் நினைவு இருக்காடான்னு. ஓ.. நல்லா நினைவு இருக்கே.. நேத்து நைட்டெல்லாம் உட்கார்ந்து படிச்சேன்னு சொல்றான் மாயன். இரு கேள்வி கேட்கறேன்னு குஸ்தி டாடி ஆரம்பிக்க...அப்போதுதான் செம்மை + மொழி என்ன சொல்லுன்னு கேட்கிறார்.
அச்சச்சோன்னு சொல்லும் மாயனுக்கு குஸ்தி என்ன கேள்வி கேட்கப் போறாரோ தெரியலையேன்னு பம்மறான். விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் காட்சிதான் மேற்கண்ட காட்சி. படிக்காத மாயனுக்கு படிப்பு கத்துத் தராங்க.

பாடம் தேவி
மாயனுக்கு பாடம் சொல்லித் தரேன்னு அடிக்கடி ரசிகர்களுக்கு மாயனும் தேவியும் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் மட்டும்தான் அரங்கேறியது. பாடம் கத்துகிட்ட பாடு இல்லை... மாயன் தேவியை கொஞ்சம் நெருங்கினாலும், அதுக்கு என்னடா பதில், இதுக்கு என்னடா அர்த்தம்னு தேவி திசை திருப்பிகிட்டே இருந்தா. சரி, பாடம் அவ்ளோதான்.. இனி இவங்களுக்கு முதலிரவுதான்னு ரசிகர்களே நினைக்க ஆரம்பிச்சு இருந்தாங்க.

அரவிந்த் தாமரை
தாமரை தனது அம்மா மனசை மாத்தி, இன்னொரு கல்யாணத்தில் இருந்து தப்பிச்சு, அதே மணமேடையில் அரவிந்த் கையால் இனொரு தாலியும் கட்டிக்கிட்டா. இந்த வயசிலாவது ரெண்டாம் தாரமாக வாழும் அம்மாவுக்கு கழுத்தில் தாலியை அப்பா கட்ட வேணும்னு அழுதுகிட்டே கேட்டுகிட்டு, அந்த கல்யாணமும் நடந்துருச்சு. ரெண்டாவது முறை கல்யாணம், மிஸ்ஸான கல்யாணம், யாரும் பார்க்காம நடந்த கல்யாணம்... அதனால மறுபடியும் கல்யாணம்னு எல்லா கல்யாணமும் நடந்துருச்சு.

ஒரு ஜோடிக்கு முதலிரவு
அரவிந்த் தாமரை சேர்ந்து வாழாம இருக்காங்க. அவங்களுக்கு இன்னொரு முறையும் கல்யாணம் ஆயிருச்சு. இனி முதலிரவு பேஷா நடத்தலாம்னு சொன்ன ஐயர் ஆனா நாலு நாள் பொறுத்துக்கணும்னு சொல்லிட்டார். மாயனுக்கும் தேவிக்கும் பேஷா இன்னிக்கு ராத்திரியே முதலிரவு வச்சுக்கலாம்னு ஐயர் சொன்னார், ஆனால் தேவி டெஸ்டில் பாஸ் செய்தால்தான் முதலிரவுன்னு சொல்லிட்டா.

செம்மை + மொழி =என்ன?
இப்படித்தான் பாடம் படிக்க வந்த மகன் மாயனிடம் குஸ்தி அப்பா கேட்கிறார்.. எங்கே படிச்சேன்னு சொன்னியே செம்மை + மொழி = என்னன்னு சொல்லுன்னு. திருதிருன்னு விழிக்கும் மாயன் அப்படி இப்படிப் பார்த்துட்டு செம்ம மொழி ன்னு சொல்றான். உங்களுக்கு சிரிப்பு வருதா கோவம் வருதா? இது அவங்கவங்க சாய்ஸ்!