50 நாட்களை கடந்த பிக்பாஸ்.. இப்போது வரை முதல் 3 இடங்களை கைப்பற்ற போவது யார்?

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் 50 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது வரை முதல் 3 இடங்களில் உள்ளது யார் என தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த ஜூன் 23ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியையும் கடந்த இரண்டு சீசன்களை போலவே நடிகர் கமல்ஹாசன்தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளில் 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து 16வது போட்டியாளராக மீரா மிதுன் வந்தார்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

அவர்களில் ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, ஆகியோர் எவிக்ஷன் முறையில் வெளியேற்றப்பட்டனர். சரவணன் தவிர்க்க முடியாத காரணத்தினால் நாமினேஷனுக்கு செல்லாமலே வெளியேற்றப்பட்டார்.

50வது நாள்

50வது நாள்

இதைத்தொடர்ந்து கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார். இந்நிலையில் நேற்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி 50வது நாளை எட்டியது.

யார் யாருக்கு தகுதி?

யார் யாருக்கு தகுதி?

இதைத்தொடர்ந்து இந்த 50 நாட்களில் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள ஹவுஸ்மேட்ஸ்களில் முதல் மூன்று இடங்களை யார் பிடிப்பார்கள் என்று கேட்டார் கமல். இதைத்தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ்கள் தங்களுடன் இருப்பவர்களில் யார் யார் எந்தெந்த இடத்திற்கு தகுதியானவர்கள் என்பதை கூறினர்.

மதுமிதாவுக்கு மூன்றாமிடம்

மதுமிதாவுக்கு மூன்றாமிடம்

அதன்படி தர்ஷன் முதல் இடத்தை பிடித்து டைட்டில் வின்னராக வாய்ப்பிருப்பதாக சக ஹவுஸ்மேட்ஸ்கள் கூறினர். இரண்டாவது இடத்தை சாண்டி பிடிப்பார் என சக ஹவுஸ்மேட்ஸ்கள் தெரிவித்தனர். அதேபோல் மூன்றாவது இடத்தை மதுமிதா பெறுவார் என சக ஹவுஸ்மேட்ஸ்கள் தெரிவித்தனர்.

தர்ஷனுக்கு தங்கம்

தர்ஷனுக்கு தங்கம்

இதைத்தொடர்ந்து அவர்கள் மூவருக்கும் மெடல் கொடுக்கப்பட்டது. முதல் இடத்தை பிடித்த தர்ஷனுக்கு தங்க மெடலும், இரண்டாமிடத்தை பிடித்த சாண்டிக்கு வெள்ளி மெடலும் மூன்றாமிடத்தை பிடித்த மதுமிதாவுக்கு வெண்கல மெடலும் வழங்கப்பட்டது.

இன்னும் இருக்கிறது

இன்னும் இருக்கிறது

இந்த மெடல் 50 நாள் வரை உள்ள கணிப்பின்படிதான் என்ற கமல், இன்னும் 50 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் அது எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்றார். பார்ப்போம் என்ன நடக்க போகிறது இன்னும் எஞ்சிய 50 நாட்களில்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X