அநாதை பொணமா நாங்களே அநாதை தான்.. மீனா, ஸ்ரீதேவி ரியாக்ஷன் பார்த்தீங்களா.. ஜோடி ஆர்யூ ரெடி புரமோ!
சென்னை: விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் எனும் நடன நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. தற்போது அது ஜோடி ஆர்யூ ரெடி எனும் ரியாலிட்டி ஷோவாக மாறியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நடன நிகழ்ச்சியை மீனா, ஸ்ரீதேவி, சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்று நடத்தி வருகின்றனர். ஜோ படத்தின் ஹீரோ ரியோ ராஜ் தொகுப்பாளராக ஷோவை கலகலப்பாக கொண்டு செல்கிறார்.
சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9.30 மணிக்கு இந்த நடன நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரத்துக்கான புரமோக்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், அதன் புதிய புரமோ ரசிகர்களை கண் கலங்க வைத்து வருகிறது.

மற்ற சேனல்களில் இருப்பதை விட ரியாலிட்டி ஷோக்கள் அதிகமாக விஜய் டிவியில் தான் களைகட்டி வருகின்றன. சூப்பர் சிங்கர், ஜோடி ஆர்யூ ரெடி, பிக் பாஸ், குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக், அது இது எது என ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்களை என்டர்டெயின் செய்து வருகின்றன.
மீனாவும் ஸ்ரீதேவியும்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தனது கணவர் மறைவுக்குப் பிறகு மீடியாக்களில் தலை காட்டமால் இருந்து வந்தார். ஆனால், சில மாதங்களிலேயே தனது கவலைகளை மறக்க ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்க ஆரம்பித்த மீனா விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவியுடன் இணைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர்யூ ரெடி நிகழ்ச்சிக்கு நடுவராக உள்ளார்.
ஜோடி ஆர்யூ ரெடி: விஜய் டிவியில் புதிதாக தொடங்கி உள்ள ஜோடி ஆர்யூ ரெடி நடன நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. நடுவர்களாக மீனாவும், ஸ்ரீதேவியும் உள்ள நிலையில், அவர்களை பார்க்கவே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். பல திறமையான நடனக் கலைஞர்கள் இந்த போட்டியில் பங்கேற்று நடனமாடி வருகின்றனர்.
ஸ்டேஜில் பிணம் எரிக்கும் டான்ஸ்: போட்டியாளர்கள் இருவர் ஸ்டேஜில் கட்டைகளை அடுக்கி பிணங்களை எரிப்பது போன்ற செட்டப்பில் டான்ஸ் ஆடியுள்ளனர். அதன் புரமோ தற்போது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா சமயத்தில் உயிரிழந்த தனது தந்தைக்கு சமர்ப்பணமாக இந்த டான்ஸ் ஆடியிருப்பதாக போட்டியாளர் கூறியுள்ளார். அநாதை பிணங்களை எரிக்க மாட்டோம்னு சொல்றீங்களா? நாங்களே அநாதைகள் தான் நாங்க எரிச்சிக்கிறோம் என சொல்லும் வசனங்களுடன் வரும் பாடலில் அசத்தல் நடனம் போட்டுள்ளனர்.
வாயை பிளந்த மீனா: தீயை மூட்டி வைத்து இருவரும் நடனம ஆடியதை பார்த்து நடிகை மீனா வாயை பிளந்து பார்த்த காட்சிகள் புரமோவில் வெளியாகி உள்ளன. மேலும், நடிகை ஸ்ரீதேவி அவர்களின் கஷ்டத்தையும் வேதனையையும் பார்த்து கண்கலங்கி கொடுத்த ரியாக்ஷன்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
சாண்டி மாஸ்டர் உருக்கம்: நிச்சயமா உங்க அப்பா ஆசையை நீ நிறைவேத்துப்பா என சாண்டி மாஸ்டர் கண் கலங்கி உருக்கத்துடன் நடனமாடியவர்களை வாழ்த்தி உள்ளார். ரியாலிட்டி ஷோ ஸ்டேஜில் இப்படியொரு உருக வைக்கும் பர்ஃபார்மன்ஸா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











