சேரன் குறித்து மீரா கூறிய குற்றச்சாட்டு உண்மையா? வைரலாகும் 'அந்த' வீடியோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள சேரன் மீது சக போட்டியாளரான மீரா மிதுன் கூறிய குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தற்போதுதான் சூடுபிடித்துள்ளது. வனிதா சென்ற பிறகு டிஆர்பி டவுன் ஆகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று நடந்த சம்பவத்தால் பார்வையாளர்களின் எண்ணிக்கை எகிறியிருக்கும்.
அந்தளவுக்கு சென்சேஷனலான ஒரு விஷயத்தை உருவாக்கி அலற விட்டார் மீரா மிதுன். சேரன் மீது அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் வந்தார்?
சேரன் தனது வயிற்றில் கையை வைத்து தள்ளினார் என்றும் கையை வைக்க அது சரியான இடம் இல்லை என்றும் கூறினார் மீரா மிதுன். மற்ற ஆண்கள் யாருமே அங்கு வராத போது சேரன் மட்டும் அங்கு வரவேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.

அடங்காத மீரா
அவர் பேசியது, சேரன் வேண்டுமென்றே மீரா மிதுன் மீது தவறான நோக்கத்தில் கை வைத்ததை போன்று இருந்தது. சேரன் தவறான நோக்கமில்லை என்று கூறிய பிறகும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் இதுகுறித்து பேசிய பிறகும்கூட மீரா மிதுன் கொஞ்சம் அடங்கவில்லை.

வீடியோ வைரல்
சேரனை தவறான மனிதர் என்பதை போலவே சித்தரித்தார். மீராவின் பேச்சை கேட்ட நெட்டிசன்கள், பிக்பாஸ் வீட்டில் நடந்த அந்த சம்பவம் குறித்த வீடியோவை வைரலாக்கினர்.
தவறான நோக்கம் இல்லை
அந்த வீடியோவில் சேரன், லாஸ்லியாவை பிடிப்பதற்காக தள்ளுமா என்று மீராவை தள்ளுகிறார். ஆனால் மீராவை சேரன் திரும்பிக்கூட பார்க்கவில்லை. மீராவை தள்ளியதில் சேரனுக்கு எந்த தவறான நோக்கமும் இல்லை என்று தெளிவாக தெரிகிறது. அந்த வீடியோ உங்களுக்காக..


Click it and Unblock the Notifications











