என்னாச்சு இந்த மீராக்கு.. டிரெஸ்ல ஹுக் போட பிக்பாஸ் வீட்டுல பெண்களே இல்லையா? இதெல்லாம் ஓவரோ ஓவர்!
சென்னை: டிரெஸின் பின்பக்கம் ஹுக் போட்டுவிடுமாறு மோகன் வைத்யாவிடம் மீராக் கூறியது முகம் சுளிக்க வைத்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் சுவாரசியம் கூடி வருகிறது. தினம் தோறும் ஒரு சண்டைக்காட்சி, அழுகை, காமெடி என களைக்கட்டி வருகிறது.
நேற்றைய எபிசோடும் அப்படிதான் களைக்கட்டியது. காலையிலேயே பிக்பாஸ் வீட்டின் மதர் ஃபாத்திமா பாபு தலையில் லாஃபர் தெரபி பயிற்சி செய்யப்பட்டது.

சிரிப்பாய் சிரித்தது
இதனால் பிக்பாஸ் வீடே சிரிப்பாய் சிரித்தது. இதைத்தொடர்ந்து வழக்கமான வேலைகளுடன் நகர்ந்தது பிக்பாஸ் வீட்டின் 5ஆம் நாள்.

ஹுக் போட சொன்ன மீரா
அப்போது காலையில் குளித்த மீரா, டிரெஸிங் ரூமில், மோகன் வைத்யாவிடம் தனது டிரெஸின் ஹுக்கை போட்டுவிடுமாறு கூறியுள்ளார். அதனை சற்றும் விரும்பாத மோகன் வைத்யா போடவில்லை என தெரிகிறது.

மீராவிடம் கேட்ட வனிதா
பின்னர் வீட்டின் கேப்டனான வனிதாவிடம் நடந்ததை கூறி, இனி இதுபோன்று என்னிடம் நடந்துகொள்ள வேண்டாம் என தெரிவிக்குமாறு கூறியுள்ளார். ஏற்கனவே மீராவுக்கும் வனிதாவுக்கும் ஏழாம் பொருத்தமாய் உள்ள நிலையில் மீராவை அழைத்து மோகன் வைத்யாவை ஹுக் போட சொன்னாயா என்று கேட்டார்.

நீங்களே சொல்லிவிடுங்கள்
அதனை கேட்கக்கூட தயாராக இல்லாத மீரா, மோகன் வைத்யா எனக்கு அப்பா மாதிரி நான் அவருக்கு பொண்ணு என்று கூறிவிட்டு ஓடி விட்டார். இதனை ஃபாத்திமா பாபு மற்றும் மோகன் வைத்யா ஆகியோரிடம் கூறிய வனிதா நீங்களே மீராவிடம் சொல்லிவிடுங்கள் என்றார்.

இதெல்லாம் ஓவரோ ஓவர்
என்னதான் முற்போக்குவாதி என்றாலும் ஒரு ஆணை தனக்கு டிரெஸின் ஹுக் போட்டுவிட கூறுவதெல்லாம் டூ மச். மீரா ஹுக் போட்டுவிட ஒரு பெண் கூடவா இல்லை பிக்பாஸ் வீட்டில்? என்னதான் பெற்ற அப்பாவாகவே இருந்தாலும் மகளை தொட்டு பேசுவது ஒரு குறிப்பிட்ட வயது வரைதான். அப்படி இருக்கையில் அறிமுகமான 3 நாட்களுக்குள்ளேயே அப்பா என கூறி ட்ரெஸ்க்கு ஹுக் போட சொல்வதெல்லாம் ஓவரோ ஓவர்!


Click it and Unblock the Notifications











