ஏம்மா மீரா உனக்கு என்னதான் பிரச்சனை? அவரு வயசுக்காவது மரியாதை குடும்மா! மனுஷன இப்படி படுத்துற!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுன், இயக்குநர் சேரனை அவமானப்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்றுள்ள மீரா மிதுன் யாரையும் மதிப்பதே இல்லை. யார் பேசுவதையும் கேட்பதும் இல்லை. தான் செய்வதுதான் சரி என்ற மனோ நிலையில் உள்ளார்.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் கூட்டு சேர்ந்துள்ளார் மீரா மிதுன். சாண்டிக்கும் சரவணனுக்கும் இயக்குநர் சேரனை கண்டாலே பிடிக்கவில்லை. இந்நிலையில் அவர்களுடன் சேர்ந்துகொண்டு சேரனை உண்டு இல்லை என செய்து வருகிறார் மீரா.

பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை
ஏற்கனவே சேரனின் முகத்தை பார்த்தாலே அருவப்பாக உள்ளது, வாந்தி வருகிறது என்றெல்லாம் பேசினார் மீரா. ஆனால் அதையெல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை சேரன். நேற்று முன்தினம் எபிசோடில் சேரனுக்கான டாஸ்க்கை அவர் செவ்வனே என செய்து கொண்டிருந்தார்.

நிறவெறி பிரச்சனை
அப்போது கத்தாதீங்க, டீசன்ட்டா பேசுங்க என்றார். மேலும் ஷெரின் நிறம் குறித்து சேரன் நகைச்சுவையாக எல்லோர் முன்பும் பேசிய ஒரு விஷயத்தை தவறாக சித்தரிக்க முயற்சித்து நிறவெறி பிரச்சனையை கொண்டு வர முயற்சித்தார்.

ஓவராக பேசும் மீரா
இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திலும் சேரனை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும், அவரை அவமானப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே உள்ளார் மீரா. மேலும் சேரன் மீது யார் கோவப்படுகிறார்களே அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஓவராக பேசி வருகிறார் மீரா.

சேரனை பார்க்கவே பாவமாக
இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் சேரனுடன் மல்லுக்கட்டுகிறார் மீரா. மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் எடுத்துக்கூறியும் மீரா கொஞ்சமும் கேட்காமல் சேரனை நோக்கி வார்த்தை கணைகளை வீசுகிறார். இந்த சூழ்நிலையில் சேரனை பார்க்கவே படு பாவமாக உள்ளது.

நான் வேற ஆள்
இதைத்தொடர்ந்து தயவு செஞ்சி எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க என்றபடி கையெடுத்து கும்பிடுகிறார் சேரன். இனிமே நான் யாருடனும் பேசவில்லை, யாருடனும் பழகவில்லை என்னை விட்டுடுங்க நான் வேற ஆள் என்றபடியே செல்கிறார். சேரனை இப்படி ஒரு சூழ்நிலையில் பார்க்கவே பெரும் நெருடலாக உள்ளது.

என்னதான் பிரச்சனை?
இந்த புரமோவை பார்த்தவரை பலரும் சேரனுக்கு ஆதரவாகவே பேசுகின்றனர். மீராவுக்கு எதிராகதான் சூழ்நிலை உள்ளது. ஆக மீராதான் ஏதோ வழக்கம் போல் செய்திருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகியுள்ளது. மீராவுக்கு அப்படி என்னதான் பிரச்சனை சேரனுடன் என்று தெரியவில்லை, அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், அப்படி ஒரு படைப்பாளியை தனக்கு நிகராக நினைத்துக்கொண்டு போட்டி போட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











