டீசென்ட்டா பேசுங்க.. கத்தாதீங்க.. சேரனை தொடர்ந்து அவமதிக்கும் மீரா மிதுன்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 30 : Promo 2: வெளிவந்த சேரன் உண்மை முகம்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுன் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இயக்குநர் சேரனை தொடர்ந்து அவமதித்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் யாருடனும் டெர்ம்ஸ் ஒத்துபோகாத ஒரு ஆள் என்றால் அது மீரா மிதுன்தான். எல்லோரிடமும் நான்சிங், பிரச்சனை சண்டை என தனி ரூட்டில் கேம் ஆடி வருகிறார் மீரா.

மேலும் சின்ன சின்ன விஷயத்தையெல்லாம் பெரிதாக்கி ஆர்க்யூ செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஹவுஸ்மேட்ஸ் பேசுவதை ஒரு நாள் கூட அவர் காது கொடுத்து கேட்டதில்லை மீரா மிதுன்.

மீராவுக்கு ஆதரவு கொடுத்தார்

மீராவுக்கு ஆதரவு கொடுத்தார்

ஆரம்பத்தில் இருந்தே மீராவுக்கு இயக்குநர் சேரனுடன் ஒத்துப்போகவில்லை. அபிராமி, சாக்ஷி ஆகியோர் மீராவுக்கு எதிராக இருந்தபோது, மீராவுக்கு ஆதரவாக சாக்ஷி மற்றும் அபிராமிக்கு அட்வைஸ் செய்தவர் சேரன்.

அருவருப்பாக உள்ளது

அருவருப்பாக உள்ளது

ஆனால் சேரனிடமே எகிறினார் மீரா மிதுன். சேரனை பார்த்தாலே அருவருப்பாக உள்ளது என்றும் உவெ என்றும் வாந்தி எடுப்பது போல் செய்தார் மீரா. மீரா மிதுன் சேரனை ஒரு இயக்குநராகவே மதிக்கவில்லை. வயதில் மூத்தவர் என்றும் கூட சேரனுக்கு மீரா மரியாதை கொடுப்பதில்லை.

ஊர் தலைவராக சேரன்

ஊர் தலைவராக சேரன்

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கிராமத்து மண் மனம் வீசும் வகையில் பிக்பாஸ் வீடு இரண்டு கிராமங்களாக பிரிக்கப்பட்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது. சேரனுக்கு கொடுத்த டாஸ்க்கை அவர் சரியாக செய்தார். அவரது டாஸ்க்கே சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட வேண்டும் என்பதுதான். ஊர் தலைவராக தனது வேலையை சரியாகதான் செய்தார் சேரன்.

மதுவை ஏற்றிவிட்ட மீரா

மதுவை ஏற்றிவிட்ட மீரா

ஃபன் டாஸ்க்கை சீரியஸாக கொண்டு போக விரும்பாத சேரன், அதனை எடுத்து கூறினார். அப்போது சேரனை இன்சல்ட் செய்ய வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டிருந்த மீரா, தனது கிராம தலைவியான மதுமிதாவிடம் அவர் சொல்வதை கேட்காதே என ஏற்றிவிட்டார்.

பிரளயத்தை கிளப்ப பார்த்த மீரா

பிரளயத்தை கிளப்ப பார்த்த மீரா

மேலும் ஏற்கனவே சேரனை பிடிக்காத சரவணனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஓவராக பேசினார் மீரா. ஷெரின் நிறம் குறித்து காமெடியாக பேசிய சேரனை அவர் தப்பாகத்தான் பேசினார் என்று பிரளயத்தை கிளப்ப பார்த்தார் மீரா.

டீசென்ட்டா பேசுங்க

டீசென்ட்டா பேசுங்க

இதனால் கோபமடைந்த சேரன், உங்களிடம் நான் பேசவில்லை, என் பேச்சுக்கு வராதீர்கள் என்று சத்தமாக கூறினார். அப்போது பதிலுக்கு பதில் பேசிய மீரா, கத்தாதீங்க டீசென்ட்டா பேசுங்க என்றார்.

திருந்துவாரா மீரா?

திருந்துவாரா மீரா?

இப்போ வரைக்கும் டீசென்ட்டாதான் பேசிக்கிட்டு இருக்கேன் என்று கூறினார் சேரன். இப்படி என்ன டாஸ்க் கொடுத்தாலும் அதில் பிரச்சனையை கொண்டுவருவதை வழக்கமாக கொண்டுள்ளார் மீரா. வெளியே வந்தபிறகாவது தனது குறைகளை அறிந்து திருந்துவாரா மீரா மிதுன்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X