twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மக்களே.. பிக்பாஸ் வீட்டுக்குள் புதுசா வந்தது இவங்கதான்!

    |

    Recommended Video

    Bigg Boss 3 Tamil : என்ன கவின்னை சாக்ஷியும் காதலிக்கிறாரா? - வீடியோ

    சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் புதிய என்ட்ரியாக டான்சர் மீரா மிதுன் நுழைந்துள்ளார்.

    விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் அன்றைய தினமே 15 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே பலரின் பெயர் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலானது. அவர்களில் பெரும்பாலானோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துவிட்டனர்

    15 போட்டியாளர்கள்

    15 போட்டியாளர்கள்

    அந்த 15 பேரும் ஏதோ ஒரு விதத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். மோகன் வைத்யா, ஃபாத்திமா பாபு, நடிகர் சரணவன், இயக்குநர் சேரன், நடிகை மதுமிதா, சாக்ஷி அகர்வால், லாஸ்லியா, அபிராமி, ஷெரின், ரேஷ்மா, வனிதா, கவின், சாண்டி, முகென், தர்ஷன் ஆகியோர் ஆவார்.

    மிஸ்ஸான பெயர்கள்

    மிஸ்ஸான பெயர்கள்

    வைரலான பட்டியலில் மிஸ்ஸானது, நடிகர்கள் மயில்சாமி, பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை கஸ்தூரி மட்டுமே. இந்நிலையில் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியின் போது தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் தன்னிடம் 17 பேரின் பெயர் கொண்ட கார்டுகள் உள்ளது என்றார்.

    எதிர்பார்க்கப்பட்ட 2 பேர்

    எதிர்பார்க்கப்பட்ட 2 பேர்

    அவர்களில் 15 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில் எஞ்சிய 2 பேர் இடையில் வருவார்கள் என்று கூறி முடித்தார். இதனால் நடிகர்கள் மயில்சாமி, பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை கஸ்தூரி ஆகியோரில் 2 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    அந்த நியூ என்ட்ரி இவர்தான்

    அந்த நியூ என்ட்ரி இவர்தான்

    இந்நிலையில் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். மீரா மிதுனும் டான்சர் என தெரிகிறது. நேற்று வெளியான ப்ரமோவில் பிக்பாஸ் வீட்டுக்குள் யாரோ நியூ என்ட்ரி என்பது தெரிந்த இதனால் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் தற்போது அது மீரா மிதுன் என உறுதியாகியுள்ளது.

    English summary
    Meera Mithun is a new entry for Biggboss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X