சேரனுக்கு வேற வேலையே இல்லை.. எப்பவும் கத்திக்கினே இருக்காரு.. சந்தில் சிந்து பாடிய மீரா!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 17 : Promo 1: சேரன் கோவத்தில் இப்படி பண்ணிட்டாரே- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா கிடைத்த கேப்பில் சேரனை வாரியது அவரது ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் பங்கேற்றுள்ள மீரா மிதுன் அடுத்தவர் சொல்வதை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாமல் தான் பேசுவதுதான் சரி என்று இருந்து வருகிறார். மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்காமல் எழுந்து செல்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இதனால் மீரா மீதுனுக்கும் ஹவுஸ் மேட்ஸ்களுக்கும் இடையே எப்போதும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் பொறுமையாக இருந்துவரும் சேரனையே டென்ஷனாக்கினார் மீரா.

 மதுவுக்கு எதிராக ஜால்ரா

மதுவுக்கு எதிராக ஜால்ரா

ஆரம்பத்தில் மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் அவரை ஒதுக்கிய போது, இப்படி நடந்துக்கொள்ளக்கூடாது என அவர்களுக்கு அட்வைஸ் செய்தவர் சேரன். இதேபோல் ஆதரவாக இருந்த மதுமிதாவுக்கு எதிராக திரும்பிய மீரா, வனிதா கும்பலுடன் சேர்ந்து ஜால்ரா போட்டு வருகிறார்.

சேரனிடம் பாய்ந்த மீரா

சேரனிடம் பாய்ந்த மீரா

இந்நிலையில் இயக்குநர் சேரனிடம் மீண்டும் வம்புக்கு சென்றுள்ளார் மீரா மிதுன். பாத்திரம் கழுவுவது, பாத்ரூம் கழுவுவது என எந்த வேலையும் செய்யாமல் எஸ்கேப்பாக வருகிறார். இதனை கேட்கப்போன சேரனிடமும் பாய்ந்தார்.

கவினுக்கும் சேரனுக்கும் வாக்குவாதம்

கவினுக்கும் சேரனுக்கும் வாக்குவாதம்

நேற்றைய எபிசோடில் கவினுக்கும் சேரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட தனக்கு இந்த விளையாட்டு புரியவில்லை என்றும் தான் வெளியேற போவதாகவும் கூறினார் சேரன். இதனால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

என்னை வெளியேற்றுங்கள்

என்னை வெளியேற்றுங்கள்

இதைத்தொடர்ந்து கேமராவிடம் பேசிய சேரன் இந்த விளையாட்டை எனக்கு புரிய வையுங்கள் அல்லது இந்த விளையாட்டில் இருந்து என்னை வெளியேற்றுங்கள் என கோரிக்கை வைத்தார்.

எஃப்ஐஆர் போடு

எஃப்ஐஆர் போடு

சேரன் வெளியே கத்துவதை கேட்ட சரவணன் ஏன் இப்படி கத்துகிறார் என கேட்டார். மேலும் சேரன் மீது ஒரு எஃப்ஐஆர் போடு என்றும் அங்கு அமர்ந்திருந்த மீராவிடம் கூறினார்.

கத்திக்கினே இருப்பாரு

கத்திக்கினே இருப்பாரு

அதற்கு பதிலளித்த மீரா, அவருக்கு வேலையே இல்லை, எப்போ பாரு ஏதாவது கத்திக்கினே இருக்காரு என சென்னை தமிழில் சேரன் குறித்து சந்தில் சிந்துப்பாடினார். சாக்ஷி, அபிராமி, வனிதா, ஷெரின் என பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ்கள் மீராவுக்கு எதிராக இருந்தபோது மீராவிடம் அப்படி நடந்து கொள்ளக்கூடாது என அட்வைஸ் செய்தவர் சேரன்.

கொதிக்கும் ரசிகர்கள்

கொதிக்கும் ரசிகர்கள்

இந்நிலையில் அனைத்தையும் மறந்துவிட்டு அவரிடமே தனது வேலையை காட்டுகிறார் மீரா. மீராவின் இந்த நடவடிக்கை சேரன் ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X