விரைந்தது போலீஸ்.. முதலில் கைதாகப் போவது வனிதாவா? மீராவா?.. பரபரப்பில் பிக் பாஸ் வீடு!
ஆள்கடத்தல் வழக்கில் வனிதாவையும், பண மோசடி வழக்கில் மீரா மிதுனையும் போலீசார் எந்நேரமும் கைது செய்யலாம் எனத் தெரிகிறது.
Recommended Video
சென்னை: ஆள்கடத்தல் வழக்கில் வனிதாவையும், பண மோசடி வழக்கில் மீரா மிதுனையும் கைது செய்ய போலீசார் பிக்பாஸ் வீட்டிற்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் பரபரப்புக்கு என்றுமே பஞ்சமிருக்காது. இன்னும் ஒரு வாரத்திற்கு அந்த வீட்டில் உச்சக்கட்ட பரபரப்பு நிகழும் என தெரிகிறது.
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதாவுக்கும், அவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களது மகள் ஜோவிதா, தனது தந்தை ஆனந்தராஜுடன் தெலங்கானாவில் வசித்து வருகிறார்.

ஆள்கடத்தல் வழக்கு
இந்த சூழலில் மகள் ஜோவிதாவை கடந்த பிப்ரவரி மாதம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலங்கானா போலீசில் ஆனந்தராஜ் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட அம்மாநில போலீசார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மீரா மிதுன்
இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளரான மாடல் மீரா மிதுன் மீதும் ஏற்கனவே பண மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சென்னை தேனாம்பேட்டை போலீசார் இந்த வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

தெலுங்கானா போலீஸ்
இந்நிலையில், ஆள்கடத்தல் வழக்கில் வனிதாவை கைது செய்ய தெலுங்கான போலீசார் சென்னை வந்துள்ளனர். அவர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்து வனிதாவை கைது செய்ய விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீராவும் கைதாகிறார்
இதற்கிடையே சென்னை தேனாம்பேட்டை போலீசாரும் மீராவை கைது செய்ய சென்னை பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டிற்கு விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே இருவரும் இன்று கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
போலீஸ் கைது நடவடிக்கையால் சென்னை பூந்தமல்லி ஈவிபி பிலிம் சிட்டி பரபரப்பாக இருக்கிறது. அதேபோன்ற பரபரப்பு பிக் பாஸ் செட்டிலும் தொற்றிக்கொண்டுள்ளது. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பான காட்சிகள் அரங்கேறும் என்று தெரிகிறது. ஆக, பிக் பாஸ் ரசிகர்களுக்கு பரபரப்பான எபிசோட் காத்திருப்பது மட்டும் நிஜம்.


Click it and Unblock the Notifications











