'மெகா இண்டர் காலேஜ் திருவிழாவில்' ஆர்யா, அஞ்சலி!

By Mayura Akilan

சென்னை: சத்தியம் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் "மெகா இண்டர் காலேஜ் உலக சாதனையாளர் திருவிழா" தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் தொடங்க இருக்கிறது . இந்தப் பிரமாண்டமான நிகழ்விற்குத் திரையுலக முன்னணி பிரபலங்கள் பெறும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விழாவில் நடிகர்கள் ஆர்யா, விஜய் சேதுபதி நடிகை அஞ்சலி ஆகியோர் பங்கேற்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள திறமையான மாணவர்களை கண்டுபிடிப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

மாணவர்களுக்கு துறை ரீதியான போட்டிகளும், பேராசிரியர்களுக்கும் உற்சாகமான போட்டிகளை நடத்த இருக்கிறது சத்தியம் தொலைக்காட்சி.

உலகிற்கு நிரூபிப்போம்

உலகிற்கு நிரூபிப்போம்

"விளையாட்டுத்தனமாக இருந்தாலும் படிக்கின்ற வயதில் இம்மாதிரியான போட்டிகள் மாணவர்களுக்கு நல்ல அங்கிகாரத்தைக் கொடுக்கும்என்றார் நடிகர் ஆர்யா. இந்த உலக சாதனையாளர் திருவிழாவில் கலந்து கொண்டு நாம் யார் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபிப்போம்" என உற்சாகமாக கூறியுள்ளார் நடிகர் ஆர்யா.

அசத்தல் அஞ்சலி

அசத்தல் அஞ்சலி

கல்லூரி மாணவர்களை உற்சாகப்படுத்த இந்த உலக சாதனையாளர் திருவிழாவில் நடிகை அஞ்சலியும், வளர்ந்து வரும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்து செயல்படுகின்றனர்.

துறை வாரியாக 100 போட்டிகள்

துறை வாரியாக 100 போட்டிகள்

ஒரே நிகழ்வில் 100 விதமான போட்டிகளைத் - தனித்தனித் துறைகள் வாரியாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் . கல்லூரிப் பேராசியர்களுக்கும் தனித்துவமான போட்டிகள் உண்டு.

உலக அரங்கில் பிரகாசிக்கலாம்

உலக அரங்கில் பிரகாசிக்கலாம்

கல்லூரிப் பருவத்தில் போராடத் துடிக்கும் இளைய தலைமுறைகளுக்குத் தமிழக அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு , வெற்றியாளர்களை இந்தியளவிலும் - உலகளவிலும் மேடை ஏற்ற பல விதமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள் . ஒட்டு மொத்த அளவில் வெற்றி பெறும் கல்லூரிக்குக் கேடயமும் , பதக்கமும் வழங்கப்படும் .

10 லட்சம் மாணவர்கள்

10 லட்சம் மாணவர்கள்

மாணவர்களே ..! திறமையிருந்தும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று புலம்ப தேவையில்லை. உங்களைத் தேடி விருதுகள் கொடுக்க வருகிறார்கள். உங்களை நீங்கள் தகுதிப்படுத்துங்கள் என்று அழைக்கின்றனர் சத்தியம் தொலைக்காட்சியினர். இதில் 10 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். மேலும் விவரங்களுக்கு : www.micrf.com

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X