»   »  சிநேகாவின் மேளம் கொட்டு தாலி கட்டு சீசன் 2

சிநேகாவின் மேளம் கொட்டு தாலி கட்டு சீசன் 2

By Mayura Akilan
Subscribe to Oneindia Tamil

புதுயுகம் தொலைக்காட்சியில் வழங்கும் புத்தம் புதிய மங்களகரமான ரியாலிட்டி நிகழ்ச்சி, 'மேளம் கொட்டு தாலி கட்டு.' சீசன்-2 தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடிகை சிநேகா தொகுத்து வழங்குகிறார். இந்த புதுமையான நிகழ்ச்சியில் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்திற்கு காத்திருக்கும் மூன்று இளம் பெண்கள் தங்கள் வருங்கால ஜோடியுடன் கலந்து கொள்ளலாம்.

போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே தங்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை புதுயுகம் தொலைக்காட்சி வழங்குகிறது.

மணப்பெண்களுக்கு பரிசு

மணப்பெண்களுக்கு பரிசு

மணப்பெண்களுக்குத் தேவையான கல்யாண சீர்வரிசைப் பொருட்களை கேள்விகளை கேட்டு வழங்கும் ரியாலிட்டி ஷோ மேளம் கொட்டு தாலி கட்டு.

சிநேகாவின் கேள்விகள்

சிநேகாவின் கேள்விகள்

திரைப்பட நடிகை சிநேகா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அழகான ஆடைகள், அழகழகான நகைகள் என அசத்தலாக வந்து கேள்விகள் கேட்பது நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

சீசன் 2 தொடக்கம்

சீசன் 2 தொடக்கம்

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து வித்தியாசமான சுற்றுகளுடன் விறுவிறுப்பான போட்டியாளர்களுடன் இரண்டாவது சீசன் (சீசன்-2) இன்று தொடங்குகிறது. தொடர்ந்து சனிக் கிழமைதோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

ஆறு சுற்றுக்கு 2 லட்சம் பரிசு

ஆறு சுற்றுக்கு 2 லட்சம் பரிசு

ஆறு சுற்றுகளில் இரண்டு லட்சம் மதிப்புள்ள பரிசுகளை போட்டியாளர்கள் வெல்லலாம்.

வாழ்க்கையைப் பற்றிய கேள்விகள்

வாழ்க்கையைப் பற்றிய கேள்விகள்

சுற்றுகள் அனைத்தும் திருமணம் ஆகப்போகும் தம்பதியர் தங்கள் தினசரி வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட கேள்விகள் இடம் பெறுகின்றன.

மணமக்கள் புரிந்து கொள்ள

மணமக்கள் புரிந்து கொள்ள

நாளைய மணமக்கள் இருவருக்குள் இருக்கும் புரிந்து கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை வெளிப்படுத்தும் விதமாக கேள்விகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கல்யாண சீர்வரிசை

கல்யாண சீர்வரிசை

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, வெற்றி பெரும் பெண்ணிற்கு அவரது திருமணத்திற்கு தேவையான பொருள்கள் பரிசாக கிடைக்கும். "தாலிக்கு"தேவையான தங்கத்தில் தொடங்கி, வீட்டு உபயோக பொருட்கள், திருமணஆடை,அணிகலன்கள் வரை ஒவ்வொன்றாக, இந்நிகழ்ச்சியின் ஆறு சுற்றுகளில் பரிசாக வழங்கப்படும். வெற்றி பெரும் போட்டியாளருக்கு ஒரு ரொக்க தொகையும் உண்டு.

வாழ்க்கைப்பயணம்

வாழ்க்கைப்பயணம்

பங்கு பெறும் மணப்பெண்கள் தங்கள் திருமண வாழ்க்கைப் பயணத்தை நிகழ்ச்சி மூலம் இனிமையாக தொடங்க புதுயுகம் தொலைக்காட்சி வழி வகுக்கிறது என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Melam Kottu Thali Kattu Presented by popular actress Sneha, this reality show spread over seven rounds is meant for young, yet to be married women. With questions related to marriage, prizes include gold for the Mangalsutra, household articles, ornaments and dress materials for the marriage. The winner would also be presented with a cash prize. Another interesting aspect of the program would be an interview with a popular cine artist along with spouse.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more