அறிவான பெண்களை ரொம்பப் பிடிக்கும்... நீயா? நானா? ஹைலைட்ஸ்

By Mayura Akilan

அழகோடு அறிவாளியாகவும் இருப்பது கூடுதல் தகுதியாக இன்றைக்கு விரும்பப்படுகிறது. எனவேதான் ஆணோ, பெண்ணோ தங்களை அறிவாளிகளாக காட்டிக்கொள்வதற்கு அதிகம் மெனக்கெடுகின்றனர்.

ஆசிரியரோ, அலுவலகமோ, இல்லத்தரசியோ யாராக இருந்தாலும் தங்களை ஸ்மார்ட் என்று காட்டிக் கொள்ள பலவித வேடங்களைப் போட்டுத்தான் ஆகின்றனர்.

அறிவு சக்தியானதுதான். நிறைய தகவல்கள் தெரிந்திருப்பவர்கள் தங்களை அறிவாளிகளாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். வேலை தேடும் இடத்திலோ, நான்கு பேர் கூடும் இடத்திலோ தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொள்ள வேண்டும்.

போட்டியான உலகம்

போட்டியான உலகம்

பிறரை கவரும் தன்மையோடு இருந்தால்தான் தனி அடையாளம். போட்டியான உலகில் நாம் வளரவேண்டும் என்றால் அறிவாளி வேடம் போட்டுத்தான் ஆகவேண்டும்.

அறிவாளிகளுக்கு அடையாளம்

அறிவாளிகளுக்கு அடையாளம்

கண்ணாடி, காட்டன் சேலை, ஆங்கிலப் பேச்சு, படிக்கும் புத்தகங்கள், பேசும் தோரணை போன்றவை அறிவாளிகளுக்கு அடையாளமாக அறியப்படுகிறது. பெண்கள் என்றால் எளிமையாகவும், ஆண்கள் என்றால் லூசு போலவும் இருப்பார்கள் என்றார் ஒரு பெண்.

நீயா நானாவிலே

நீயா நானாவிலே

அறிவாளி பற்றிய பேச்சில் நீயா நானா நிகழ்ச்சியைப் பற்றியும் அதிகமாக போட்டு வாங்கினார்கள். கோபிநாத் கூட கொஞ்சம் அறிவாளித்தனமாகத்தான் காட்டிக் கொள்வார் அதையும் பேசி கிண்டல் செய்தனர் பங்கேற்பாளர்கள்.

சமூக வலைத்தளங்களில்

சமூக வலைத்தளங்களில்

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் எழுதுபவர்கள் எல்லாம் அறிவாளிகளாக காட்டிக் கொள்வார்கள். தங்களுத்தான் எல்லாம் தெரியும் என்பதுபோல எல்லோரையும் போட்டுத்தாக்குவார்கள்.

தோரணையிலே இருக்குப்பா

தோரணையிலே இருக்குப்பா

கொஞ்சமாக பேசுவது.... தன்னைச் சுற்றி ஒரு வட்டம் வைத்துக் கொள்வது, புடவை கட்டிச் செல்வது, கண்ணாடி போட்டுக் கொள்வது, ஆங்கிலப் புத்தகங்களை அவ்வப் போது படிப்பது, மேக் அப் இல்லாமல் இருப்பது போன்றவை அறிவாளிகளின் அடையாளம்.

அறிவான பெண்கள் பிடிக்கும்

அறிவான பெண்கள் பிடிக்கும்

அறிவாளிகளாக வேடம் போட்டாலும், பெண்களில் சிலர் நிஜமாகவே அறிவாளிகளாகவே இருப்பார்கள். அழகோடு அறிவான பெண்களை தங்களுக்குப் பிடிக்கும் என்று சில ஆண்கள் தெரித்தனர். அதோடு அறிவோடு கொஞ்சம் குறும்புத்தனம் கொண்ட பெண்களையும் நாங்கள் ரசிப்போம் என்று கூறினர் ஆண்கள்.

டார்ச்சர் தாங்களையே!

டார்ச்சர் தாங்களையே!

அதே சமயம் ஆண்களில் அறிவாளிகளாக இருப்பவர்கள் அதிகம் டார்ச்சர் செய்கின்றனர் என்பது பெண்களின் வாதம். வீட்டில் கணவரை விட மனைவி கொஞ்சம் அறிவு குறைவானவர்களாவே காட்டிக் கொள்ள வேண்டும் அப்போதுதான் ஆண்களுக்கு பிடிக்கும் என்றனர் பெண்கள்.

டெக்னிக்கலாக பேசுவோம்

டெக்னிக்கலாக பேசுவோம்

அறிவாளியாக காட்டிக் கொள்ள சினிமாவின் டெக்னிகல் விசயங்களைப் பற்றி பேசுவோம். யாருக்கும் புரியாத நாவல்களை படித்துவிட்டு அதைப் பற்றி பேசுவோம். கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே புத்தகங்களை படிப்பதாக கூறினர் சிலர்.

அறிவாளியாக மாற

அறிவாளியாக மாற

அறிவாளியாக வேடம் போட்டால் அதிக நாள் ஓட்ட முடியாது. நிஜமாகவே அறிவாளியாக மாறவேண்டும். அதற்கேற்ப நம்மை தயார் படுத்திக் கொள்ளவேண்டும். எனவே அறிவாளியாக மாற எடுக்கும் முயற்சிகளையும் பலர் கூறினர்.

வெறும் பகடி வேலைக்கு உதவுமா?

வெறும் பகடி வேலைக்கு உதவுமா?

எதற்கெடுத்தாலும் கேலி, தான் புத்திசாலி என்று நிரூபிப்பதற்காக மற்றவர்களை முட்டாளாக்குவது போன்ற விசயங்கள் வேலைக்கு உதவாது என்றார் சிறப்பு அழைப்பாளர் கவுதம சித்தார்த்தன். இன்றைய இளம் தலைமுறையினர் காலங்காலமாக அறியப்படும் விசயத்தை எடுத்து பகடி செய்கின்றனர். இது சரியான வேலையல்ல என்றும் குற்றம் சாட்டினார். ஏனெனில் வெறும் பகடி மட்டுமே செய்வது சமூகத்திற்குத் தீங்கானது என்றார். 80களில் நெருக்கடி இருந்த போது கூட படைப்புலகில் குற்றங்களை நியாயப்படுத்தவில்லை. ஆனால் இன்றைக்கு குற்றங்களைக் கூட நியாயப்படுத்திப் பேசுகின்றனர் என்றார் கவுதம சித்தார்த்தன்.

பிடித்த அறிவுஜீவிகள்

பிடித்த அறிவுஜீவிகள்

தமிழ் சூழலில் உங்களுக்குப் பிடித்த அறிவாளிகள் யார் என்று கேட்ட கேள்விக்கு பலரும் பாரதியார், பெரியார், விவேகானந்தர், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்ற பலரைக் கூறினர். பேச்சோடு பேச்சாக நீயா நானா நிகழ்ச்சியில் 55 தமிழ் எழுத்தாளர்களை மக்களுக்கு அறிமுகம் செய்ததாக கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X