பொங்கலுக்கு டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'மெர்சல்'... விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

By Vignesh Selvaraj

Recommended Video

மெர்சல் படத்தால், அதிருப்தியில் இருக்கும் விஜய் ரசிகர்கள் !!- வீடியோ

சென்னை : அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பல தடைகளைக் கடந்து வெளியான 'மெர்சல்' திரைப்படம் ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வசூலைக் குவித்தது.

மெர்சல் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் ரூ 255 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில், படம் வெளியாகி சில மாதங்களே ஆகும் நிலையில் மெர்சல் படத்தை பொங்கல் அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பவிருப்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மெர்சல்

மெர்சல்

'மெர்சல்' படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே உற்சாகமான ரசிகர்கள் படத்தின் டீசர், போஸ்டரை பயங்கர ஹிட்டாக்கியதோடு இல்லாமல் படத்தையும் செம சூப்பர்ஹிட் ஆக்கி விஜய்யை மகிழ்ச்சிப்படுத்தினர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் தனக்கென்று பிரமாண்ட மாஸ் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். 'மெர்சல்' படக்குழுவின் வெறித்தன உழைப்பால் மெர்சல் அரசன் உலகம் முழுவதும் கெத்து காட்டினார். இன்னும் சில தினங்களில் விஜய் ரசிகர்கள் நூறாவது நாளை கொண்டாட இருந்தனர்.

நூறாவது நாள்

நூறாவது நாள்

மெர்சல் படம் திரைக்கு வந்து 100 நாட்கள் ஆக இருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் ரூ 255 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் 100-வது நாள் சமயத்தில் மெர்சல் படத்தை பிரபல தொலைக்காட்சி ஒன்று பொங்கலுக்கு ஒளிப்பரப்புகின்றது.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

மெர்சல் படம் வெளிவந்து சில மாதங்களே ஆகும் நிலையில் இப்படியான ஒரு தகவல் விஜய் ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்பட்டுத்தியுள்ளது. 'மெர்சல்' படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி வாங்கி இருக்கிறது.

பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்

பொங்கல் சிறப்பு திரைப்படங்கள்

பொங்கல் சிறப்பு திரைப்படங்களாக சன் டி.வி-யில் 'கபாலி', விஜய் டி.வி-யில் 'தீரன் அதிகாரம் ஒன்று', ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'மெர்சல்' ஆகிய படங்கள் ஒளிபரப்பாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X