‘தல’ ‘தளபதி’ மீண்டும் சேர்ந்து நடிக்கணும்: மெட்டி ஒலி காயத்ரி

By Mayura Akilan

மெட்லி ஒலி நெடுந்தொடர் மூலம் இல்லத்தரசிகளின் உள்ளங்களில் நுழைந்தவர் காயத்ரி. அவரை சரோ என்று சொன்னால்தான் பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.

மாமியாரிடம் திட்டு வாங்கி எல்லா மருமகள்கள் மனதிலும் பச்சென்று ஒட்டிக்கொண்ட காயத்ரி பின்னர் மேகலா தொடரில் நடித்தார். சில ஆண்டுகள் தமிழ் சீரியல் பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்துவிட்டு இப்போது மீண்டும் ஜீ தமிழ் சேனலில் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' நெடுந்தொடர் மூலம் வீட்டின் வரவேற்பரைக்கு வந்து போகிறார்.

இந்த காதல் தொடர் நடுத்தரவயது காதலர்களை அதிகம் கவர்ந்துள்ளதாம். தன்னுடைய சினிமா, சீரியல் பயணங்களைப் பற்றி அவரே கூறியுள்ளார் படியுங்களேன்.

அதிகம் ஒத்துக்கொள்வதில்லை

அதிகம் ஒத்துக்கொள்வதில்லை

ஒரு தொடரில் நடிக்கும் போது மற்ற தொடர்களில் கமிட் ஆவதில்லை என்பது என் பாலிசி எனவேதான் தமிழ் தொடர்களில் இவ்வளவு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இனி அப்படி ஏற்படாது.

தைரியமான காயத்ரி

தைரியமான காயத்ரி

மெட்டி ஒலி சீரியலில் எல்லோரையும் அழவைத்த சரோ மாதிரி இல்லை. நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் தைரியமான பெண்ணாக நடித்துள்ளேன்.

நடுத்தர வயது காதல்

நடுத்தர வயது காதல்

முப்பது வயதைத் தாண்டிய ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் காதல் எப்படிப்பட்டது என்பதுதான் நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரின் கதை.

தல, தளபதியுடன்

தல, தளபதியுடன்

தல அஜீத், தளபதி விஜய் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே' படத்தில் நாயகி நான்தான். அஜீத் என்னுடன் சகஜமாக பேசினார். விஜய் பேச தயக்கம் காட்டினார்.

மீண்டும் இணைவார்களா

மீண்டும் இணைவார்களா

அப்போது இருவருமே வளரும் நாயகர்கள். இன்றைக்கு இருவரும் இரு துருவங்களாக பிரம்மாண்டமாக வளர்ந்து இருக்கின்றனர். தல, தளபதி மீண்டும் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும்.

ஐந்து மொழி தெரியும்

ஐந்து மொழி தெரியும்

மும்பைப் பெண் என்பதால் தமிழில் அறிமுகமானபோது எனக்கு தமிழ் தெரியாது. இப்போது எனக்கு ஐந்து மொழி தெரியும்.

மீண்டும் சினிமாவில்

மீண்டும் சினிமாவில்

சீரியலில் மட்டும்தான் நடிப்பீர்களா? மீண்டும் சினிமாவில் நடிக்கமாட்டீர்களா என்று கேட்கிறார்கள். சும்மா வந்து போவதில் எனக்கு விருப்பமில்லை. ஒரு படம் நடிச்சாலும் வெயிட் ஆ இருக்கணும் என்கிறார் காயத்ரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X