ஷோபா வாழ்க்கையை பாலு மகேந்திரா அழிச்சிட்டான்.. குமுறிய நடிகை!
சென்னை: சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாந்தி வில்லியம்ஸ். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி, மெட்டிஒலி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்துள்ள இவர், நடிகை ஷோபா தற்கொலை குறித்து கண்கலங்கி பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
11 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வந்த சாந்தி, தமிழ் மற்றும் மலையாள என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கேமராமேனை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். இதையடுத்து கணவர் இறந்த பிறகு 18 வருஷத்துக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்த இவர் சீரியல்களில் அம்மா மற்றும் மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சாந்தி வில்லியம்ஸ் பேட்டி: இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சாந்தி வில்லியம்ஸ், மறைந்த நடிகை ஷோபா குறித்து கண் கலங்கி பேசி உள்ளார். அதில், அவள் என் உயிர், காமம் குரோதம் மோகம், அக்கல்நாம என இவங்களோட இரண்டு படத்தில் அவளோடு நடித்து இருக்கிறேன். அந்த படத்தில் ஷோபா என் தங்கையாக நடித்தாள், அந்த படத்தில் நடிக்கும் போது, நாங்க ரெண்டு பேரும் செட்டில் ஓடிபிடித்து விளையாடுவோம். அப்போது அவளுக்கு 13வயசு தான் இருக்கும், என் மடியில் வந்து உட்கார்ந்துக்கிட்டு விளையாடிக்கிட்டே இருப்பா.
அதே புடவையில் தற்கொலை: மூடுபனியில் படப்பிடிப்பில் அவளை நான் பார்த்தேன், அப்போக்கூட என்ன ஆச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்க என்று கேட்டேன், அப்போ அவ எதுவுமே சொல்லல, கடைசியா அந்த புடவையில் தான் நான் அவளை பார்த்தேன், அதே புடவையில் தான் தற்கொலை செய்து கொண்டாள். இந்த செய்தியை கேள்விபட்டு என் உயிரே போய்விட்டது. என் கணவர் தான் கதவை உடைத்து, உடலை கீழே இறக்கினார். ஷோபாவை என் கணவருக்கு ரொம்ப பிடிக்கும். அவர்களின் குடும்பத்தில் நானும் ஒரு பெண்ணாகத்தான் இருந்தேன். அவள் இப்படி ஒரு முடிவை தேடிக்கொள்வாள் என்று யாருமே நினைக்கல.
பாலு மகேந்திரா அழிச்சிட்டான்: ஒருத்தர் வாழ்க்கை கொடுக்குறாங்க என்றால், நல்ல வாழ்க்கை கொடுத்துவிட்டு போகலாம், ஆனால் வாழ்க்கையை அழிக்கக்கூடாது. இவளுடைய வாழ்க்கையை பாலு மகேந்திரா அழிச்சிட்டாரு, எனக்கு அவனை பார்த்தாலே பிடிக்காது, அவன் அங்கே வருகிறான் என்றால் நான், இந்த பக்கமாக போய்விடுவேன். அவர் தான் எனக்கு முதல் கேமரா மேன் அவர் தான், நல்லா பேசுவாரு, கடைசியில் ஷேபா வாழ்க்கையில் விளையாடி அந்த பெண்ணின் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு என்று நடிகை சாந்தி வில்லியம்ஸ் கண்ணீருடன் பேசி உள்ளார்.
18 வயதில் விபரீத முடிவு: 80 களில் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தவர் ஷோபா தனது 3 வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 18 வயதில் 17 படங்கள் நடித்து ஷோபா, தேசிய விருது, மாநில விருது, ஊர்வசி விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். 1978 பாலு மகேந்திரா இயக்கத்தில் நிஜமும் நிழலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் ஷோபா. தொடர்ந்து பாலு மகேந்திராவின் பசி, முள்ளும் மலரும், அழியாத கோலங்கள், மூடுபனி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார். பசி படத்தில் இவரின் அசாத்திய நடிப்பிற்கு தேசிய விருது கிடைத்தது இவர் ஏற்கனவே திருமணமான பாலு மகேந்திராவின் மீது காதல் வயப்பட்டதால், பல விமர்சனங்களுக்கு ஆளான ஷோபா,புகழின் உச்சியில் இருந்த போது, 1980 ஆம் ஆண்டு திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











