Micset Sriram Marriage: பாண்டிச்சேரியில் மஜாவாக நடைபெற்ற மைக் செட் ஸ்ரீராம் திருமணம்.. கலக்குறாரே!
சென்னை: மைக் செட் யூடியூப் சேனல் மூலம் ஏகப்பட்ட 'சோதனை' வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த ஸ்ரீராம் இன்று தனது காதலியை திருமணம் செய்துக் கொண்டார். பாண்டிச்சேரியில் பீச் வெட்டிங் போல செம மஜாவாக அவரது ட்ரீம் திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் மைக் செட் ஸ்ரீராமுக்கும் இளம் நடிகை ராசிகா ராஜுவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதில், ஏகப்பட்ட யூடியூப் பிரபலங்கள் பங்கேற்று இருவரையும் வாழ்த்தினர். இந்நிலையில், இருவருக்கும் சுபமுகூர்த்த நாளான இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ பாண்டிச்சேரியில் திருமணம் நடைபெற்ற காட்சிகளை அவரது நண்பர்கள் ஷேர் செய்துள்ளனர்.
யூடியூப் பிரபலங்கள்: சினிமாவுக்கு நிகராக யூடியூப் திடீரென டிரெண்டான நிலையில், ஸ்மைல் சேட்டை, பரிதாபங்கள், ஜம்ப் கட்ஸ், நரிக்கூட்டம் என ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் ரசிகர்களை கவர்ந்தன. அதில், நடித்தவர்களும் பிரபலமாகி விட்டனர். கோபி, சுதாகருக்கு எல்லாம் திருமணம் முடிந்த நிலையில், குடும்பத்தில் நடக்கும் கஷ்டங்களை பரிதாபங்கள் வீடியோக்களாக மீண்டும் தொடர்ந்து போட்டு வருகின்றனர். யூடியூபை தாண்டி சினிமாவில் சாதிக்க நினைத்து பலரும் பெரிதாக ஷைன் ஆகவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
மைக் செட் ஸ்ரீராம்: பிளாக் ஷீப் டீமுடன் இணைந்து மைக் செட் ஸ்ரீராம் ஒரு படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியிருந்தார். ரொம்ப வருஷமாக அந்த படம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், அடுத்ததாக கயல் ஆனந்தி ஸ்ரீராமுக்கு ஜோடியாக நடிக்கும் புதிய படமும் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. சினிமாவில் ஸ்ரீராம் ஹீரோவாக ஜொலிப்பாரா என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மாப்பிள்ளை கோலத்தில் இன்று மின்ன ஆரம்பித்து விட்டார்.
மைக் செட் ஸ்ரீராம் திருமணம்: கடந்த ஏப்ரல் மாதம் யூடியூப் நடிகை ராசிகா ராஜு என்பவரை நிச்சயம் செய்துக் கொண்ட ஸ்ரீராம் இன்று பாண்டிச்சேரியில் உள்ள ஒரு ரெசார்ட்டில் தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். மைக் செட் ஸ்ரீராமுக்கு திருமணம் ஆனதை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











