ஆன்லைன் ரம்மியை விட டாஸ்மாக் தான் உயிரை கொல்லுது.. முதலமைச்சர் ஸ்டாலினிடம் பிக் பாஸ் பாலா கோரிக்கை!
சென்னை: ஆன்லைன் ரம்மியை விட டாஸ்மாக் தான் தமிழ்நாட்டில் பலரது குடியை கெடுக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டாஸ்மாக்கை தடை செய்ய வேண்டும் என பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் ட்வீட் போட்டுள்ளார்.
மாடலிங் துறையில் கலக்கி வந்த பாலாஜி முருகதாஸ் கடந்த பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரன்னர் அப் ஆனார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் சிம்புவின் கைகளால் டைட்டில் வின்னர் பட்டத்தையும் பெற்றார்.

பிக் பாஸ் பாலா
பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் அவுட் அஃப் பாக்ஸ் திங் பண்ணி விளையாட்டை விளையாடி வந்தார். அவருக்கும் ஆரி அர்ஜுனனுக்கும் இடையே கடும் மோதல்கள் ஒவ்வொரு வாரமும் வீட்டுக்குள் வெடிக்கும். வெள்ளிக்கிழமையானால் ஆளே மாறி ஆரியிடம் மன்னிப்பு கேட்டு கமலிடம் திட்டு வாங்குவதில் இருந்து லேசாக எஸ்கேப் ஆகி விடுவார். ரசிகர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட பாலா சீசன் 4ன் ரன்னர் அப் ஆனார்.

டைட்டில் வின்னர்
பிக் பாஸ் சீசன் 4லேயே ஆரியா? பாலாவா? யாரு வின் பண்ணுவா என்கிற கேள்விகள் எழுந்தன. ஆனால், கடைசியில் ஆரி டைட்டிலை வென்றார். இந்நிலையில், மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாலா வனிதா விஜயகுமார், ஜூலி, ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, நிரூப், தாமரைச் செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றார் பாலா.

ஏகப்பட்ட சர்ச்சை
பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதும் சரி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னரும் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வந்தார். ஆரிக்கும் அவருக்குமான பிரச்சனை, சனம் ஷெட்டி அட்ஜெஸ்ட்மென்ட் செய்து டைட்டில் வென்றார் என பேசிய சர்ச்சை, ஜோ மைக்கேல் உடன் சண்டை என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கிய பாலா சமீபத்தில் இளம் பெண் ஒருவரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாகவும் சர்ச்சையில் சிக்கினார்.

ஆன்லைன் ரம்மியை விட
ஆன்லைன் ரம்மியால் ஏகப்பட்ட இளைஞர்கள் கடன் தொல்லையில் சிக்கி தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், அதனை தடை செய்ய பல கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆன்லைன் ரம்மியை விட டாஸ்மாக் தான் பலரது உயிரை குடித்து வருகிறது என ட்வீட் போட்டுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

முதலமைச்சருக்கு கோரிக்கை
முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்த பாலாஜி முருகதாஸ் தமிழ்நாட்டில் முதலில் டாஸ்மாக்கை தடை செய்யுங்கள் என்றும் ஆன்லைன் ரம்மியை விட அதிகம் பேர் டாஸ்மாக்கால் தான் உயிரிழக்கின்றனர் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

தந்தை மரணம்
தன்னை போல தமிழ்நாட்டில் பல குழந்தைகள் அநாதையாக இருப்பதற்கு காரணமே டாஸ்மாக் தான் என்று இன்னொரு ட்வீட்டையும் பாலா போட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே தனது தந்தை குடித்து விட்டு தன்னை பெல்ட்டால் அடிப்பார் என்று புலம்பி இருந்தார். தனது தந்தை மரணத்துக்கு காரணமே குடி தான் என்றும் கூறியுள்ளார்.

அரசியலில் என்னை இழுக்காதீங்க
அந்த ட்வீட்டில் தமிழ்நாட்டில் என்னை போல நிறைய பேர் குடி போதை காரணமாக அநாதையாகி உள்ளனர். என்னை அரசியலில் இழுக்காதீங்க, பின்னர் தாங்க மாட்டீங்க என ட்வீட் போட்டு அதிர்ச்சியை கிளப்பி உள்ளார். யாரை எதிர்த்து இப்படியொரு ட்வீட்டை பாலா போட்டுள்ளார் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

பீர் குளியல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது பாலா இதே போல குடிக்கு எதிராக பேசிய போது அவர் நீச்சல் குளத்தில் பெண் ஒருவருடன் பீர் குளியல் போட்ட புகைப்படங்களையும் தனது அறை முழுக்க சரக்கு பாட்டில்களை வைத்துக் கொண்டு பாலா போட்ட ட்வீட்டையும் ஷேர் செய்து நெட்டிசன்கள் விளாசி இருந்தனர். இந்நிலையில், இப்படியொரு ட்வீட்டை பாலா போட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











