தர்ஷன் சட்டையில் லிப்ஸ்டிக் கறை: என்ன கேம் விளையாண்டன்னு கேட்ட மோகன் வைத்யா
சென்னை: தர்ஷன் சட்டையில் லிப்ஸ்டிக் கறையை பார்த்து மோகன் வைத்யா இப்படி கேட்டுள்ளாரே.
பிக் பாஸ் 3 வீட்டில் இருப்பவர்களில் நல்ல பையன் என்று பார்வையாளர்களிடம் பெயர் எடுத்துள்ளவர் தர்ஷன். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டாத காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானது.
அதில் நல்ல பிள்ளை தர்ஷனின் சட்டையில் லிப்ஸ்டிக் கறை இருப்பது தெரிய வந்துள்ளது.
தர்ஷன்
தர்ஷனின் சட்டையில் லிப்ஸ்டிக் பட்டிருக்கே அதை எல்லாம் யாரும் கேட்காதீங்க என்று லாஸ்லியா தெரிவித்தார். இதை பார்த்த மோகன் வைத்யாவோ லிப்ஸ்டிக் படும் அளவுக்கு என்ன கேம் விளையாடினாய் என்று நக்கலாக கேட்டுள்ளார். மோகன் வைத்யாவின் பேச்சை பார்த்தவர்கள் அப்பா வயதுடையவர் பேசும் பேச்சா இது என்று விளாசியுள்ளனர்.
மோகன் வைத்யா
தர்ஷன் சட்டையில் லிப்ஸ்டிக் கறை எப்படி வந்தது என்று கேட்ட லாஸ்லியாவை பார்வையாளர்கள் பாராட்டியுள்ளனர். அதே சமயம் கிண்டலாக கேள்வி கேட்ட மோகன் வைத்யாவை குசும்பன் என்று விமர்சித்துள்ளனர். பாவம் போன்று இருந்து கொண்டு இந்த மோகன் வைத்யா பேசும் பேச்சை பார்த்தீங்களா என்கிறார்கள் பார்வையாளர்கள். இதற்கு பெயர் தான் ஊமக்குசும்பு.

காதல்
இதுவே கவின் சட்டையில் லிப்ஸ்டிக் கறை இருந்தால் ஆளாளுக்கு கண், மூக்கு, காது வைத்து பெரிய விஷயமாக பேசியிருப்பார்கள். தர்ஷன் என்பதால் கண்டுகொள்ளவில்லையா என்று கவின் ஆர்மி கேள்வி எழுப்பியுள்ளது. கவின் எப்படிப்பட்ட ஆள் என்பது அனைவருக்கும் தெரியும், அதனால் அவர் சட்டையில் லிப்ஸ்டிக் கறை இருந்தால் அது சாதாரண விஷயம் இல்லை என்கிறார்கள் பார்வையாளர்கள்.

பிக் பாஸ்
கவினுக்கு மின்னல் வேகத்தில் காதல் வந்து அதே வேகத்தில் போய் விடுகிறது. நாளுக்கு ஒரு பெண்ணை காதலிப்பவரை நல்லவர் என்றா சொல்ல முடியும். தர்ஷன் அப்படி இல்லை. அவர் பிக் பாஸ் வீட்டில் உள்ள பெண்களுடன் நாகரீகமாக நடந்து கொள்கிறார். கவின் இன்னும் டிவி சீரியல் மூடிலேயே இருக்கிறார் போன்று என்று பார்வையாளர்கள் விமர்சித்துள்ளனர். கவினுக்கு சாக்ஷி மீதும் ஃபீலிங், லாஸ்லியா மீதும் ஃபீலிங் இருப்பதால் தான் இத்தனை பிரச்சனையும்.


Click it and Unblock the Notifications











