பிக்பாஸ் பிரபலங்களுக்குள் இவ்வளவு சோகமா! கதறவிட்ட மோகன் வைத்யா, ரேஷ்மா! அப்படி என்னதான் சொன்னாங்க?

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day3 Promo 2: குழந்தையை தொலைத்தது நினைத்து கலங்கிய ரேஷ்மா- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்களுக்குள் இவ்வளவு சோகமா என யோசிக்கும் வகையில் நேற்றைய எபிசோடு இருந்துவிட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நாள்தோறும் இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் நாள் காலை முதல் ஹவுஸ் மேட்ஸ் தூங்குவது வரையிலான நிகழ்வுகள் ஒரு மணிநேரம் ஒரு எபிசோடாக ஒளிபரப்பப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய எபிசோட் சண்டை, அழுகை என இரண்டும் கலந்த கலவையாக சென்றது. நேற்றைய எபிசோடில் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களையும் கதறவிட்டு விட்டார் பிக்பாஸ்.

பிக்பாஸ் டாஸ்க்

பிக்பாஸ் டாஸ்க்

ஹவுஸ் மேட்ஸ் தங்களின் வாழ்க்கையில் சந்தித்த இழப்பு, தங்களின் குடும்பத்தில் பாதித்த இழப்பு மற்றும் கணவன் அல்லது மனைவியை பற்றி கூற வேண்டும் என டாஸ்க் கொடுத்திருந்தார் பிக்பாஸ்.

கதறிய மோகன் வைத்யா

கதறிய மோகன் வைத்யா

முதல் டாஸ்க்கே மூத்த போட்டியாளரான மோகன் வைத்யாவுக்குதான். உற்சாகமாக பவுலில் இருந்து சீட்டுக்களை எடுத்து படித்த மோகன் வைத்யா, தனது அனுபவங்களை பகிரும் போது கதறிவிட்டார்.

மரணமடைந்த கர்ப்பிணி மனைவி

மரணமடைந்த கர்ப்பிணி மனைவி

காது கேளாத வாய் பேச முடியாத மகன், ஊருக்கே இசைக்கலையை கற்று தரும் தனக்கு கலை வாரிசை கடவுள் கொடுக்கவில்லை என்று கலங்கினார். அதுமட்டுமின்றி இளம் வயதிலேயே 3 மாத கர்ப்பிணியான வாய் பேச முடியாத காது கேளாத மனைவியை விபத்தில் பறிகொடுத்ததை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார் மோகன் வைத்யா.

கண்ணீர்விட்ட ஹவுஸ் மேட்ஸ்

கண்ணீர்விட்ட ஹவுஸ் மேட்ஸ்

தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணிய தந்தை அதனை பார்க்க இல்லை என்று கூறியும் வருத்தப்பட்டார். மோகன் வைத்யாவின் பேச்சைக்கேட்ட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஆண் பெண் என்ற பேதமின்றி கண்ணீர்விட்டனர்.

பார்யாளர்களும் கண்ணீர்

பார்யாளர்களும் கண்ணீர்

குறிப்பாக அவரது மனைவியின் மரணம் குறித்து அவர் உருக்கமாக பேசியது ஹவுஸ் மேட்ஸை மட்டுமின்றி பார்வையாளர்களையும் கண்ணீர்விட வைத்து விட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து ஹவுஸ் மேட்ஸும் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.

புஷ்பா கேரக்டர்

புஷ்பா கேரக்டர்

அவரை தொடர்ந்து பேசத் தொடங்கினார் நடிகை ரேஷ்மா. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற காமெடி கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானார் ரேஷ்மா. அவரது அந்தக் கேரக்டர் படத்தின் க்ளைமேக்ஸ் வரை வந்து செல்லும்.

சிறப்பாக அமையவில்லை

சிறப்பாக அமையவில்லை

இப்படி பலரையும் படத்தில் சிரிக்க வைத்த ரேஷ்மா தனது சொந்தக்கதையை கூறி இன்று ஒட்டு மொத்த ரசிகர்களையும் கதற வைத்துவிட்டார். இளம் வயதிலேயே இரண்டு திருமணங்கள் செய்த போதும் அந்த வாழ்க்கை அவருக்கு சிறப்பாக அமையவில்லை. கணவரை விவாகரத்து செய்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் ரேஷ்மா.

9 மாத கர்ப்பத்தில் இறந்த குழந்தை

9 மாத கர்ப்பத்தில் இறந்த குழந்தை

3 குழந்தைகளை பெற்றுள்ளார் ரேஷ்மா. அதில் இரண்டாவது குழந்தை 9 மாத கர்ப்பிணியாக ரேஷ்மா இருந்த போது அவரது வயிற்றிலேயே இறந்துவிட்டது. குழந்தைக்கு சரோன் என பெயர் எல்லாம் தேர்வு செய்த நிலையில் இறந்தே பிறந்தான் குழந்தை.

கணவரால் தாக்குதல்

கணவரால் தாக்குதல்

எந்த தாயாலும் தாங்கிக்கொள்ள முடியாத சோகம் இது. மூன்றாவதாக மீண்டும் கர்ப்பமான ரேஷ்மா 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது கணவரால் பலத்த தாக்குதலுக்கு ஆளாகி மிகுந்த துயரத்தை அடைந்துள்ளார்.

ஐந்தரை மாதத்திலேயே பிரசவம்

ஐந்தரை மாதத்திலேயே பிரசவம்

இதனால் ஐந்தரை மாதத்திலேயே குழந்தையை பெற்றெடுக்கும் நிலைக்கு ஆளான ரேஷ்மா, அமெரிக்காவில் தானாக காரை ஓட்டிச் சென்று மருத்துவமனையில் சேர்ந்தார். காரை ஓட்டிச்செல்லும் போதே தனது ஐந்து மாத குழந்தை வெளியே வந்துவிட்டது.

ஒரு குழந்தை ஆட்டிசம்

ஒரு குழந்தை ஆட்டிசம்

இதைத்தொடர்ந்து 5 மாதம் இன்குபேட்டரில் வைக்கப்பட்ட அந்த குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளையும் பெரும் கஷ்டப்பட்டு உடன் பிறந்தவர்களின் எந்த ஆதரவும் இன்றி வளர்த்து வருகிறார் ரேஷ்மா.

இவ்வளவு சோகமா?

இவ்வளவு சோகமா?

அவரது அனுபவமும் ஒட்டு மொத்த பிக்பாஸ் ஹவுஸையும் கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டது. அவரது கதையை கேட்ட அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். சரவணன், சேரன், ஃபாத்திமா பாபு, மோகன் வைத்யா, மதுமிதா ஆகியோர் சத்தமாகவே அழுது ஆறுதல் கூறினர். திரையில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் பிரபலங்களுக்குள் இவ்வளவு சோகமா என யோசிக்கும் அளவுக்கு இருந்தது ரேஷ்மா மற்றும் மோகன் வைத்யாவின் வாழ்க்கை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X