For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தண்ணி ஒத்துக்காதா? இல்ல பிடிக்காதா? மோகன் வைத்யாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

|
Bigg Boss 3 Tamil : Day 23 : Promo 2: அடுத்த Drama-வை ஆரம்பித்த DADDY

சென்னை: பாத்ரூம் கழுவுவது தனக்கு ஒத்துக்கவில்லை என கூறி பிக்பாஸ் வீட்டில் எழரையை கூட்டியுள்ளார் மோகன் வைத்யா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மோகன் வைத்யா ஷார்ட் டெம்பராக உள்ளார். நகைச்சுவையை கூட சீரியஸாக எடுத்துக்கொண்டு பெரிதுபடுத்தி வருகிறார்.

கிண்டல் செய்யும் போது முன்னாடி சிரிக்கும் மோகன் வைத்ய, பின்னாடி அதையே சீரியஸாக பேசி அழுகிறார். யார் எது சொன்னாலும் பொசுக்கு பொசுக்கென்று அழுதுவிடுகிறார்.

ஒத்துக்கொள்ளவில்லை

ஒத்துக்கொள்ளவில்லை

இன்றைய புரமோவில் மோகன் வைத்யா தனக்கு பாத்ரூம் கிளினீங் டிப்பார்ட்மென்ட் வேண்டாம் என்கிறார். மேலும் பாத்ரூம் கழுவும் தண்ணீர் தனக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும் மோகன் வைத்யா கூறிகிறார்.

பின்னாடிதான் பேசுவார்கள்

பின்னாடிதான் பேசுவார்கள்

இதற்கு என்ன எதிர்வினை கிடைத்ததோ தெரியவில்லை முகத்திற்கு நேராக பேச வேண்டியதுதானே என பாத்ரூமில் கத்துகிறார். அதற்கு சாக்ஷி யாரும் இங்கு முன்னால் பேச மாட்டார்கள் பின்னாடிதான் பேசுவார்கள் என ஒத்து ஊதுகிறார்.

லோ பட்ஜெட் சினேகன்

லோ பட்ஜெட் சினேகன்

ஆனால் மோகன் வைத்யா முதல் வாரத்தில் பெற்ற பெயரை நாளுக்கு நாள் கெடுத்துக்கொண்டார். மேலும் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதையும் அவர் வாடிக்கையாக கொண்டுள்ளதால் அவரை லோ பட்ஜெட் சினேகன் என கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்

எவிக்ஷன் இல்லன்னு சொல்லட்டும்

இவரு பாத்ரூம் கழுவ மாட்டாராமாம். அப்ப இத்தன நாள் கழுவுன எல்லாம் இளிச்சவாயன்களா... ? முடியாட்டி வெளிய போங்கப்பா... பாத்ரூம் கழுவுனா எவிக்ஷன் இல்லன்னு சொல்லட்டும் முதல் ஆளா வருவாப்புல என்கிறார் இந்த நெட்டிசன்.

எஸ்கேப் ஆகிறார்

மோகன் வைத்தியா பாத்ரூம் கிளீன் செய்யும் ரூமிலிருந்து எஸ்கேப் ஆகிறார் என்று சொல்கிறார் இந்த நெட்டிசன்.

டெரர் போட்டோ

மோகன் வைத்யாவின் கோரிக்கைக்கு ரேஷ்மா ரியாக்ஷன் என இப்படி ஒரு டெரர் போட்டோவை போட்டுள்ளார் நெட்டிசன்.

எப்படடி குளிக்கிறீங்க?

தண்ணி ஒத்துக்களையா, அப்புறம் எப்படி குளிக்கிறீங்க?? கழுவுறீங்க?? என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

இவ்ளோ பெரிய அக்கப்போர்

ஒரு கக்கூஸ் கழுவரதுக்கு இவ்ளோ பெரிய அக்கப்போர் !!! மோகன் வைத்யா செய்வதெல்லாம் ஓவர் என்றும் முடியாதவர் போன வாரமோ போயிருக்க வேண்டியதுதானே என்றும் கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

மிஸ்ஸிங் வனிதா

இதே வனிதா அக்கா இருந்தாங்கன்னா உன் மேல மிஸ்டேக் இருக்கு நீ போய் பாத்ரூம் கழுவுன்னு சொல்லிருப்பாங்க. மிஸ்ஸிங் வனிதா அக்கா என்று டிவிட்டியுள்ளார் இவர்.

முத்தம் கொடுப்பது கட்டிப்பிடிப்பது

முடியாவிட்டால் கிளம்பி விடுங்கள்.. முத்தம் கொடுப்பது கட்டிப்பிடிப்பதை தவிர நீங்கள் உள்ளே என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

புரணி பேசுறதுல கிங்

நேருக்கு நேர் பேசுறது பத்தி இவரு சொல்றாரு.. நீங்க என்னைக்கு நேரா பேசியிருக்கீங்க.. புரணி பேசுறதுல கிங் இந்த மோகன் வைத்யா என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.

இல்ல புடிக்காதா?

தண்ணீ ஒத்துக்காதா? இல்ல பிடிக்காதா என வனிதா ஸ்டைலில் கேட்கிறார் இந்த நெட்டிசன்.

சரியில்லையே சார்

இப்போ பாத்ரூம் பிரச்சனையா? மோகன் சார், நேருக்கு நேர் பேசனும்னு சொல்றீங்களே இவ்ளோ நாள் பின்னாடிதானே பேசுனீங்க சார்.. குறும்படம் நிறைய இருக்கு போடலாமா.. எப்பவும் சரி மாதிரி கத்துறீங்க.. ஆனா எதுவும் சரியில்லையே சார் என்கிறார் இவர்.

ஒரே குழப்பமா இருக்கு

மீராவுக்கு செம்ம போட்டி கொடுக்கிறார் மோகன். இந்த வாரம் யாரை அனுப்புறதுன்னு ஒரே குழப்பமா இருக்கு. என்கிறார் இந்த நெட்டிசன்.

தட் மொமென்ட்

நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்.. என்ன போய் டாய்லெட்ட கழுவ வச்சீட்டீங்களேடா.. தட் மொமென்ட் என்கிறார் இந்த நெட்டிசன்.

English summary
Mohan Vaithya is creating problem in Biggboss house.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more